06 July 2019

ஆதிநாத் மற்றும் சாந்திநாத் தீர்த்தங்கரர் கோவில்கள்

வாழ்க வளமுடன் 






முந்தைய பதிவில் பார்ஷ்வநாத்   தீர்த்தங்கரர் கோவிலை பார்த்தோம் . இன்று  ஆதிநாத் மற்றும் சாந்திநாத் தீர்த்தங்கரர் கோவில்களை காணலாம் .




சாந்திநாத் தீர்த்தங்கரரும் பதினெட்டடி உயரத்தில் காட்சியளிக்கிறார் . இக்கோவில்  1133 ம் ஆண்டு கட்டப்பட்டது.






சமணத்தின் வேறு பெயர்கள்

சமண மதம் வெவ்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.

ஐம்புலன்களையும் இருவினைகளையும் ஜெயித்தவர் (வென்றவர்) என்பதால் தீர்த்தங்கரர், ஜினர் என்று போற்றப்படுகிறார்.

ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் என்று அழைக்கப்பட்டது. இது தமிழில் சமண மதம் என வழங்கப்பட்டது.

தீர்த்தங்கரரை, அருகபதவியை (பேரின்ப நிலை) அடைந்தவர் என்பதால் அருகன் என்றும் வழங்குவதுண்டு.

ஆகவே அருகனை வணங்குவோர் ஆருகதர் எனப்பட்டனர். அம்மதம் ஆருகதமதம் என்றும் வழங்கப்பட்டது.

சமணர் நிக்கந்தர் என வழங்கப்பட்டனர். நிக்கந்தர் என்றால் பற்றற்றவர் என்று பொருள்படும். அதனால் சமணர் நிகண்டர் எனவும் வழங்கப்பட்டனர். சமண சமயம் நிகண்ட மதம் எனப் பெயர் பெற்றது.

ஜினர் =
வென்றவர் (ஐம்புலன்களையும், இருவினைகளையும் ஜெயித்தவர்) = ஜைனமதம்

அருகர் =
அருகபதவி (இருவினைகளை முற்றுமாகப் போக்கி, வீடு பேற்றின் பேரின்ப நிலையை அடைந்தவர்) = அருகமதம்

நிக்கந்தர் =
பற்றற்றவர் = நிக்கண்ட மதம்

பிண்டியர் =
பிண்டி (அசோக) மரத்தைப் போற்றி வழிபடுபவர் = பிண்டியர் மதம்


அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணர் பிண்டியர் என்றும் குறிக்கப்பட்டனர். மதங்கள் ஏகாந்த வாதம், அநேகாந்த வாதம் என இருவகைப்படும். சமண சமயத்துக்கு ‘அனேகாந்த வாதம்’ என்றும் ஒரு பெயர் உண்டு.

ஒரு பொருளை ஒரு நோக்கில் மட்டும் பார்ப்பது ஏகாந்தவாதம்.
ஒரு பொருளைப் பல்வேறு நோக்கில் பார்ப்பது அனேகாந்தவாதம்

சமணம் தவிர, பிற மதங்கள் ஏகாந்தவாதத்தைக் கூறுவன. சமணம் மட்டுமே அனேகாந்தவாதக் கொள்கையைக் கூறுவதால் அனேகாந்தவாதம் என்றழைக்கப்பட்டது.





ஆதிநாத் தீர்த்தங்கரர் கோவில் மற்ற இருகோவில்களுக்கும் நடுவில் உள்ளது . இங்கு  ஆதிநாத் தீர்த்தங்கரர்  சிறிய சிலை வடிவிலேயே காட்சியளிக்கிறார்.









சமணத்தின் தொன்மை

கொல்லாமை அல்லது அகிம்சைக் கோட்பாட்டைப் போற்றும் சமண சமயம் (ஜைன சமயம்)  வேதகாலத்திற்கும் முற்பட்டது.

நால்வகை வேதத்தில் பழமையானது என்று கருதப்படும் ரிக்வேதம் சமண சமயத்தின் மேன்மையைப் பறைசாற்றுகிறது. 

ஆதி நாதரைப் (விருஷபதேவரை) போற்றும் தோத்திரங்கள் பல அங்குக் காணலாம். யஜுர் வேதத்தில் நேமிநாதர் (22 - ஆம் தீர்த்தங்கரர்) துதி சிறப்புடன்  அமைந்துள்ளது.

பதினெண் புராணங்களிலும் தீர்த்தங்கரர்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. சிவபுராணம், அக்கினிபுராணம் ஆகியவற்றிலும் ஆதிபகவனின் துதியைக் காணலாம்.

இவற்றையெல்லாம் நோக்கும் போது மிகப் பழங்காலத்தில்  ஜைனசமயமும் தத்துவமும் நாடெங்கும் பரவியிருந்திருக்கலாம் என்பதை உணரலாம். ஆங்காங்கே கிடைத்துள்ள சமண சமயம் சார்ந்த சாசனங்கள் இக்கருத்தினை மேலும் உறுதிச் செய்கின்றன.






நாங்கள் இங்கு சென்ற போது மதிய நேரம் ...தரை எல்லாம் அதிகமான  சூடு..எனவே ஒவ்வொரு மண்டபத்தையும் ஓடி ஓடி அடைந்தோம் . யாருமே இல்லாமல் மிக அமைதியாக காட்சியளிக்கிறது இந்த சமண கோவில்கள் .



சிங்கங்கள் யானை மேல்




பார்ஷ்வநாத்   தீர்த்தங்கரர் கோவில்



விடியற்காலை ஆரம்பித்த பயணம் காலை உணவு மட்டும் வழியில் எடுத்துக் கொண்டு ...வேறு எங்கும் நிற்காமல் இவ்விடங்களை தரிசித்தோம் ....மதியமும் சில பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த கோவில் நோக்கி சென்றோம் ...

அது எங்கே அடுத்த பதிவில் ...


முந்தைய பதிவுகள் ...










தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்





5 comments:

  1. படங்களை மிகவும் ரசித்தேன். விவரங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  2. புகைப்படங்கள் பிரமிக்க வைக்கிறது என்றால் உங்களின் அருமையான விளக்கங்கள் மிகவும் பிரமிக்க வைக்கிறது!

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    சமணர்கள் கோவில்களைப் பற்றி அழகான புகைப்படங்களும், விபரமான விளக்கங்களும் படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது. முகப்பு மண்டபங்களின் அழகும், கருவறை மண்டபங்களின் அழகும் கண்களை கவர்கிறது.கோவிலின் சுற்றுப்பிராகங்களும் ரொம்பவும் அழகாக அமைதியாக இருக்கின்றன. தாங்கள் அளித்த விபரங்கள் படித்துணர அருமையாக இருக்கின்றன. எப்போதோ பள்ளி பருவத்தில் படித்ததை,ஆனால் மறந்ததை நினைவுபடுத்துகின்றன.

    யானைகளின் மேல் சிங்கங்கள்.. பொருத்தமான வாக்கியங்கள். தங்கள் அன்பு மகன்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  4. சிரத்தையுடன் அதிக விவரங்கள் சேகரித்து தந்து பதிவு அருமை.
    அழகான படங்கள் பதிவுக்கு மேலும் மெருகூட்டியது அனு.ஹளபேடு
    பார்க்க வேண்டிய இடம் தான்.

    ReplyDelete
  5. அழகான படங்கள். சிறப்பான தகவல்கள். விபரங்கள் மூலம் சமணமதம் பற்றி அறியமுடிந்தது. வெயிலின் தாக்கம் படங்களில் தெரிகிறது.

    ReplyDelete