30 July 2019

போளியும் சுழியமும்



வாழ்க வளமுடன்

இன்றைய சமையல் பதிவில் போளியும், சியமும்...





ஏதும்  புது முயற்சி எல்லாம் இல்லாமல் வழக்கமான முறையில் செய்தவை .....இந்த போளியும் சுழியமும்


மேல் மாவு செய்ய

மைதா மாவு  - 1 கப்
உப்பு                     - 1/2 தே.க
மஞ்சள் தூள்    - 1/2 தே.க
நல்லண்ணை    - 2 தே.க


மாவுடன் கொஞ்சம் நீர், நல்லண்ணை ,உப்பு,  மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

 பின் அரைமணி நேரம் ஊறவிடவும்.





பூரணத்திற்க்கு

கடலை பருப்பு - 1கப்
வெல்லம் - 3/4 கப்


கடலை பருப்பை குக்கரில் வேகவைக்கவும். பின் வெல்லத்தையும்  கடலை பருப்பையும் சேர்த்து மிக்ஸ்யில் மசிக்கவும்    ...








மாவையும், பூரணத்தையும்  சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டவும். பின்  மாவை தேய்த்து, நடுவில் பூரணம் வைத்து   ...தட்டி..... மிதமான தீயில்  எண்ணை விட்டு வேக வைத்து  எடுத்தால் ...

போளி ரெடி...





















 சுழியம் / ஜியம் 

போளிக்கு  செய்தது போன்றே   பூரணம் தயாரித்து  உருண்டையாக உருட்டி வைக்க வேண்டும் ...

மைதா மாவில்  சிறுது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கரைத்து, அதில் பூரண உருண்டைகளை முக்கி எடுத்து எண்ணையில் பொரிக்க சுழியம் தயார் ...







அன்புடன்
அனுபிரேம்




14 comments:

  1. போளி.. ஆஹா... சுடச்சுட தட்டில்போட்டு மேலே கொஞ்சம் நெய் ஊற்றிச் சுவைக்கலாம்.

    இரண்டாவது செய்முறை எளிது என்கிறது! அதுவும் சுவையாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஸ்ரீராம் சார் ...சுழியும் ரொம்ப எளிது செய்ய ...சுவைக்கவும் ..

      Delete
  2. இரண்டும் பார்க்க அழகாய் இருக்கிறது அனு.சுவையும் அருமையாக இருக்கும்.

    எனக்கு இரண்டும் பிடிக்கும். தேங்காய் பூரணமும் வைத்து செய்யலாம்.


    சுழியம் / ஜியம் செய்யும் போது மைதாவும் கொஞ்சம் அரிசி மாவும் கலந்தால் மேல் தோல் சுவையாக இருக்கும்.
    நாங்கள் சுசியம் என்று சொல்வோம்.

    ReplyDelete
    Replies
    1. நாங்க எப்பவும் பருப்பு பூரணம் தான் கோமதி மா..

      அடுத்த முறை செய்யும் போது கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து செஞ்சு பார்க்குறேன் ..

      இந்த பேர் சொல்றதில் எப்பவும் குழப்பம் மா..அம்மா வீட்டில் சீயம் ன்னு தான் சொல்லுவோம் ..
      என் நண்பி சுழியம் ன்னு தான் சொல்லுவா

      மாமியார் வீட்டில் இது ரொம்ப புதுசு போளி தான் அங்கு ஸ்பெஷல் ..அத்தை அருமையா செய்வாங்க அவங்களை பார்த்து கத்துகிட்டது தான் இந்த முறை ..

      Delete
  3. வணக்கம் சகோதரி

    போளி மிக அருமை. செய்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. ஆகையால் ஒன்றிரண்டு ஆசையோடு எடுத்துக்கொண்டேன்.மிகவும் நன்றாக உள்ளது. நானும் தங்கள் செய்முறைபடிதான் பருப்பு போளி, தேங்காய் போளி எனச் செய்வேன். முன்பெல்லாம் வருடத்திற்கு நான்கைந்து முறை வீட்டின் விஷேடங்கள்தோறும் கண்டிப்பாக விருந்துடன் இதைச் செய்வோம்.

    சுழியமும் அருமையாக உள்ளது.மைதாவிலும் செய்யலாம். அரிசி உளுந்து ஊற வைத்து அரைத்து அதில் பூரணத்தை முக்கி எடுத்து போட்டும் பண்ணுவோம். எல்லாம் கண்ணுக்கு விருந்தாக நாவில் அந்தந்த சுவையை நினைவூட்டுவதாக உள்ளது சகோதரி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மா ...

      அரிசி உளுந்து ஊற வைத்து அரைத்து அதில் பூரணத்தை முக்கி எடுத்து போட்டும் பண்ணுவோம் .....இந்த முறையும் தெரியாது மா...நேத்து பதிவு பார்த்து ஒரு நண்பி பகிர்ந்த போது தான் தெரியும்..

      Delete
  4. போளி அழகு. சீயனும் அழகு. ஆனால் நாங்க சீயனுக்கு எப்போதும் தேங்காய் வெல்லப் பூரணம்தான். வெல்லப்பாகில் தேங்காய் போட்டு கட்டியாக்கி அதனை பூரணமாக உபயோகப்படுத்துவேன்.

    கடலையை (தளிகைப்பண்ணின) மிக்சியில் வெல்லத்தோடு அரைத்துச் செய்ததில்லை. நான் அதுக்கும் வெல்லப்பாகில் அரைத்த கடலையைக் கலக்கணும்னு நினைத்திருந்தேன்.

    சீயன் மேல் மாவில் அரிசிமா கலக்கலைனா, சவ சவன்னு இருக்கும். முறுகலா இருக்காது.

    இரண்டு வாரங்களைத் தாண்டிவிட்டேன் இனிப்பை உட்கொள்ளாமல். படங்கள் ஆவலைத் தூண்டினாலும் கட்டுப்படுத்திக்கொள்கிறேன். (உங்களுக்கு எதுக்கு அந்தப் பாவம்..ஹா ஹா)

    ReplyDelete
    Replies
    1. நன்றி நெல்லை சார் ..

      எங்க வீட்டில் எப்பவும் பருப்பு பூரணம் தான் ..

      அம்மா பாகு எடுத்து அதில் ஆட்டிய கடலை பருப்பை சேர்த்து பூரணம் செய்வாங்க .. ..ஆன இது வரை அம்மா அரிசி மாவு மேல் மாவில் கலந்து பார்த்தது இல்ல ..அடுத்த முறை கொஞ்சம் சேர்த்துப் பார்க்குறேன் ..

      அசோ உங்க ஆசையை தூண்டிடேன் னா ..என்ன பண்றது கொஞ்சம் பார்த்து பண்ணுங்க ..

      Delete
  5. வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க இப்படி எல்லாம் பதிவு போட்டு மனசை கிளறுறாங்க..... இப்படி செஞ்சவங்க அப்படியே பார்சல் அனுப்புவாங்கன்னு பார்த்தா ஹும்ம்ம் சரி பதிவு போடுறாங்க அதோட விடுறாங்களா அழகான படத்தையும் வேற அல்லவா போடுறாங்க மனைவிகிட்ட கேட்டால் இனிப்பு உடம்புக்கு ஆகாதும்பாங்க அல்லது பூரிக்கட்டையை தூக்குவாங்க.... இந்த வாரம் பிஸி அதனால ஆசைக்கு மூட்டை கட்டி வைச்சிட்டு அடுத்த வாரம் முயற்சி பண்ணணும்

    ReplyDelete
    Replies
    1. அசோ நீங்களும் மா ...

      யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ..அதனால் தான் இங்க பதிவிட்டது ...

      சோ உங்க போளி ஆசையும் அடுத்த வாரம் நிறைவேறட்டும் ...

      Delete
  6. சுழியம் செய்ய தெரியும். போளியை இதுவரை செய்ததில்லை.

    ReplyDelete
  7. போளி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இப்போது போளிக்கு எங்கே போவது! :( விடுமுறையில் வரும்போது தான் செய்து தரச் சொல்ல வேண்டும்! தில்லி சரவண பவனில் கிடைக்கிறது என்றாலும் ஏனோ வீட்டில் சாப்பிடுவது போல அங்கே சாப்பிட முடிவதில்லை!

    ReplyDelete
  8. முதல் முதலா வரதாலே இனிப்போடு ஆரம்பிக்கிறேன். போளியும், சிய்யம், சுகியன், சீயன் நானும் செய்திருக்கேன். படங்களோடு போட்டிருக்கேன். போளி இப்போல்லாம் செய்வதே இல்லை. அபூர்வமாக ஆகி விட்டது! :(

    ReplyDelete
  9. சிய்யனுக்குத் தேங்காய்ப் பூரணம் தான்! ச்ராத்தங்களில் செய்யும் சிய்யனுக்குப் பாசிப்பருப்பும் தேங்காய் சேர்த்தால் அதோடு தேங்காயும் வெல்லமும் சேர்த்து அரைத்த பூரணம். கடலைப்பருப்புப் பூரணத்தில் செய்ததில்லை.

    ReplyDelete