03 July 2019

சமண தீர்த்தங்கரர்கள் கோவில் - ஹளபேடு

வாழ்க வளமுடன் 




 ஹோய்சாலேஸ்வரர் கோவில் ,ஹளபேடுவிலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் இந்த சமணர் கோவில்கள்  உள்ளன.

ஒரே வளாகத்தில் மூன்று கோவில்கள் இருகின்றன.இந்த கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் உருவானவை.


சமணம் என்னும் சொல் ‘சிரமண’ என்னும் வடசொல்லின் திரிபாகும். அதனால் ‘சிரமணர்’, தமிழில் சமணர் என அழைக்கப்பட்டனர். சிரமணர் என்பதற்கு இன்பதுன்பம் ஆகிய இரண்டையும் சமமாக ஏற்பவர் என்று பொருள் கொள்ளலாம்.

நட்பு, பகை அற்றவர் என்றும் கூறலாம். தன்னை இகழ்வாரைக் கோபித்தலும் புகழ்வாரைப் போற்றலும் இல்லாதவர். அன்பும் அருளும் நிறைந்தவர்.

இறப்பையும் பிறப்பையும் பொருட்படுத்தாமல் உலகில் நல்லவற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தங்களின் எல்லாச் சுகங்களையும் துறந்தவர்.

அது மட்டுமன்றி ஐம்புலன்களையும் தன்வயப்படுத்தியவர்.

யான், எனது என்னும் செருக்கினை அழித்தவர்.

எக்காரணத்தாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதவர்.

ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் காப்பவர் என்று விரிவான பொருளைத் தருவதாகக் கொள்ளலாம்.




சமணசமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்தில் பரவச் செய்வதின் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் தோன்றுகின்றனர் என்பது சமண சமயக் கொள்கை.


 ‘தீர்த்தங்கரர்’ என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’ என்பது பொருள்.

இதுவரை 24 தீர்த்தங்கரர்கள்  தோன்றியுள்ளார்கள் என்பதும் இனியும் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றுவர் என்பதும் இச்சமயக் கொள்கையாகும்






மேற்கூரை 


முதல் கோவிலில்  பார்ஷ்வநாத்   தீர்த்தங்கரர் அருள்புரிகிறார் .

பார்ஷ்வநாத்  தீர்த்தங்கர் கோவில் கங்கராஜாவின் மகன் போப்பதேவால் 1133 ம் ஆண்டு கட்டப்பட்டது.

இங்கு பார்ஷ்வநாத்  தீர்த்தங்கர்  பதினெட்டடி உயரத்தில் காட்சியளிக்கிறார் .

இங்கு தூண்கள் எல்லாம் வளையல் அடுக்கி வைத்தது போன்று உள்ளது ,ஆனால் தூண்களின் நிறம் வித்தியாசமாக பழுப்பு நிறத்தில் இருகின்றன.




24 தீர்த்தங்கரர்கள்

    சமண சமயத்தின் கொள்கைகளைப் பரவச் செய்யும்
வகையில் இதுவரையில் தோன்றிய 24 தீர்த்தங்கரர்களின்
பெயர்கள் -

ஆதிபகவன் அல்லது விருஷப தேவர்
அஜிதநாதர்
சம்பவநாதர்
அபிநந்தனர்
சுமதிநாதர்

பதுமநாபர்
சுபார்சவ நாதர்
சந்திரப் பிரபர்
புஷ்ப தந்தர் அல்லது சுவிதிநாதர்
சீதளநாதர் அல்லது சித்தி பட்டராகர்

சீறியாம்ச நாதர்
வாசு பூஜ்யர்
விமலநாதர்
அநந்தநாதர் அல்லது அநந்தஜித் பட்டாரகர்
தருமநாதர்

சாந்திநாதர்
குந்துநாதர் அல்லது குந்து பட்டாரகர்
அரநாதர்
மல்லிநாதர்
முனிசுவர்த்தர்

நமிநாதர் அல்லது நமிபட்டாரகர்
நேமிநாதர் அல்லது அரிஷ்டநேமி
பார்சுவநாதர்
வர்த்தமான மகாவீரர்

    சமண சமயக் கடவுளான அருகக் கடவுள் போன்றே
தீர்த்தங்கரர்களையும் தெய்வமாகச் சமணர்கள் போற்றி
வழிபடுகின்றனர்.

இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு.8 நூற்றாண்டில் இருந்தவர்.  கி.மு. 817 முதல் கி.மு. 717 வரையில் இருந்தவர்.

இவருக்குப் பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இவர் கி.மு. 599 முதல் கி.மு. 527 வரையில் இருந்தவர்.




பார்ஷ்வநாத்   தீர்த்தங்கரர்



தரை முழுவதும்  வழவழப்பாகவும் , மிக குளிர்ச்சியாகவும் இருந்தன. வெளியில் மிக அதிக வெயில் , உள்ளே அத்தனை குளிர்ச்சி .





முந்தைய பதிவுகள் ...









தொடரும்...


அன்புடன்
அனுபிரேம்











8 comments:

  1. பதிவு மிக அருமை.

    24 தீர்த்தங்கரர்களின்
    பெயர்கள் - விவரம் குறிப்பிட்டது அருமை.

    பார்சுவநாதர் கோவில் அழகு ! கலைவெலைப்பாடு கவர்கிறது. படங்கள் அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.
    ஹளபேடு பார்க்க வேண்டிய இடம்.
    நன்றி அனு.

    ReplyDelete
  2. உள்ளே கருவறையின் முன்பாக இடது புறத் தூணில் நாம் நிற்பது சற்றே வித்தியாசமாக இருப்பதைக் காணமுடியும், அதனை அங்கிருந்தோர் காண்பித்தனர்.

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் சென்ற போது அங்கே யாருமே இல்லை ஐயா...மேலும் உள்ளே விளக்கு , வெளிச்சம் ஏதும் இல்லாமல் கணவர் வெளியவே அமர்ந்து இருக்க ..நானும் பசங்களும் உள்ளே சென்று வேகமாக பார்த்துவிட்டு வந்தோம் ..

      Delete
  3. சுவாரஸ்யமான இடம், விவரங்கள். அழகிய படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  4. தீர்த்தங்கரர்கள் கோவில் கண்டுகொண்டோம்.

    ReplyDelete