வாழ்க வளமுடன்
புழுங்கல் அரிசி புட்டு ...
தேவையானவை
புழுங்கல் அரிசி - ஒரு கப்
வெல்லம் - முக்கால் கப்
நெய் - 2 ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - சிறிது
ஏலக்காய்த்தூள் - சிறிது
முந்திரி
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை
புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாகப் பொடித்துக்கொள்ளவும்.
இதில் உப்பு மற்றும் சூடான தண்ணீர் சேர்த்து தளரக் கலந்து, வேக வைக்கவும் .
ஆறியதும் கட்டியில்லாமல் நன்றாக உதிர்த்துக்கொள்ளவும்.
வாணலியில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும்.
பின் பாகை உதிர்த்த புட்டில் சேர்த்து முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் மற்றும் நெய் சேர்த்துக் கலக்கவும் .
எளிய சுவையான புட்டு தயார் ...
அனுபிரேம்
படிக்கும்போது சுலபமாகத்தான் இருக்கிறது. சனி ஞாயிறில் செய்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது! :) முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteபுட்டு எளிமையாக இருக்கிறது செய்வது சுலபம் இல்லையா அனு?
ReplyDeleteருசியும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு இருப்பார்கள்.
செய்முறை படங்கள் நன்றாக இருக்கிறது.
இது ரெம்ப வித்தியாசமா இருக்கே. இப்படி செய்து சாப்பிட்டது இல்லை. நல்ல டேஸ்டாக இருக்கும்போல. நாங்க அரிசிமாவில்தான் செய்வோம்.அல்லது கோதுமையில். படங்கள் அருமையா சாப்பிடதூண்டுகிறது.
ReplyDeleteசுவையான குறிப்புகள்!
ReplyDeleteநிறம் ஆழ்ந்த பிரவுன் மாதிரி இருக்கணுமே. இங்கு கலர் ஆழ்ந்த நிறமா இல்லையே...
ReplyDeleteபடித்தவுடன் செய்துபார்க்கணும்னு தோணியது. செய்கிறேன்.