அடுத்து நாங்கள் சென்ற இடம் சரவணபெலகுலா
சரவணபெலகுலா என்னும் கன்னடச் சொல்லுக்கு ‘சரவண வெள்ளைக்குளம்’ என்று அர்த்தம். ஊரின் நடுவே ‘பெலகுலா’ என்ற குளம் இருக்கிறது. கன்னடத்தில் ‘பெலா’ என்றால் வெள்ளை; ‘குலா’ என்றால் குளம் என்றும் பொருள். இது சமணர்களின் புனிதத் தலமாகும்.
விந்தியகிரி மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது ‘கோமதீஸ்வர பகவான்’ என்று அழைக்கப்படும் சமணத் துறவி பாகுபலியின் சிலை. 57 அடி உயரம் உள்ள இந்த பாகுபலி சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டது என்னும் சிறப்புடையது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3350 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது; விந்தியகிரி, சந்திரகிரி என்ற இரு பெரும் மலைகளால் சூழ்ந்திருக்கிறது.
சுமார் 1500 படிகள் ஏறித்தான் மலைக் கோயிலை அடையமுடியும்.மிக சுத்தமாக பராமரிக்கப்படும் இடம் .
வெயில் வரும் முன்னே ஏறினால் தான் எளிது ...நாங்கள் காலை 8 மணிக்கு ஏற ஆரம்பித்தோம் ...பல நாள் காண வேண்டும் என ஆசைப்பட்ட இடம் இது ...
சிறிய மண்டபங்கள் பல வழியெல்லாம் உள்ளன ..அங்கு எல்லாம் பல சமண தீர்த்தங்கரர்களின் கோவில்கள் இருக்கிறது ..
தீர்த்தங்கரர்களின் உருவங்கள் பாறைகளில் செதுக்கல்களாக ...
பாகுபலி சிலைக்கு, அதாவது கோமதீஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகத் திருவிழா நடை பெறுகிறது. அப்போது கோமதீஸ்வரர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அடுத்த பதிவில் சரவணபெலகுலா -கோமதீஸ்வரர் தரிசனம் காணலாம் ...
தொடரும்...
அன்புடன்
அனுபிரேம்
சரவணபெலகுலா என்னும் கன்னடச் சொல்லுக்கு ‘சரவண வெள்ளைக்குளம்’ என்று அர்த்தம். ஊரின் நடுவே ‘பெலகுலா’ என்ற குளம் இருக்கிறது. கன்னடத்தில் ‘பெலா’ என்றால் வெள்ளை; ‘குலா’ என்றால் குளம் என்றும் பொருள். இது சமணர்களின் புனிதத் தலமாகும்.
விந்தியகிரி மலையின் உச்சியில் அமைந்திருக்கிறது ‘கோமதீஸ்வர பகவான்’ என்று அழைக்கப்படும் சமணத் துறவி பாகுபலியின் சிலை. 57 அடி உயரம் உள்ள இந்த பாகுபலி சிலை ஒரே கல்லில் வடிக்கப்பட்டது என்னும் சிறப்புடையது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3350 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது; விந்தியகிரி, சந்திரகிரி என்ற இரு பெரும் மலைகளால் சூழ்ந்திருக்கிறது.
வெயில் வரும் முன்னே ஏறினால் தான் எளிது ...நாங்கள் காலை 8 மணிக்கு ஏற ஆரம்பித்தோம் ...பல நாள் காண வேண்டும் என ஆசைப்பட்ட இடம் இது ...
சிறிய மண்டபங்கள் பல வழியெல்லாம் உள்ளன ..அங்கு எல்லாம் பல சமண தீர்த்தங்கரர்களின் கோவில்கள் இருக்கிறது ..
முந்தைய பதிவுகள் ...
அன்புடன்
அனுபிரேம்
சரவணபெலகுளா - நல்ல விளக்கம்.
ReplyDeleteபடங்களும் தகவல்களும் சிறப்பு. தொடர்கிறேன்.
//சரவணபெலகுலா//
ReplyDeleteநான் ரசகுல்லா போல ஒன்று என நினைச்சிட்டேன். அழகிய படங்கள்.. பார்க்க மிக அழகாக இருக்குது.
மேலிருக்கும் ஆனைப்பிள்ளையும் அழகு.
இரண்டாண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தோம். ஏறும்போது சற்று அலுப்பு தெரிந்தது. வயதில் முதிர்ந்த பலர் ஆர்வமோடு சென்றதைப் பார்த்தபோது எங்களின் அலுப்பு குறைந்து போட்டி போட்டுக்கொண்டு ஏற ஆரம்பித்தோம். அருமையான இடம்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteசரவணபெலகுலா பெயர் காரணம் நன்கு விவரித்து கூறியது நன்றாக இருந்தது. படங்கள் அனைத்தும் தெளிவாகவும், அழகாகவும் இருக்கின்றது. கோவில் பற்றி விபரங்கள் தங்கள் பதிவின் மூலம் தெருந்து கொண்டேன். படிகள் 1500 பிரமிப்பூட்ட வைக்கிறது. உறவுகளுடன் பயணித்தால் பேசிக் கொண்டே செல்லும் போது கொஞ்சம் சிரமம் தெரியாது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//கோமதீஸ்வரர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.//
ReplyDeleteஅபிஷேக காட்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பிய போது பார்த்து இருக்கிறேன்.
படங்கள் எல்லாம் அழகு. போக வேண்டும் என்று நினைத்த இடம். எவ்வளவு நேரம் ஆனது 1500 படியை கடந்து போக?
ஒன்றை மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் மா ...
Deleteபிடிமானத்திற்கு ஒரே கம்பி என்பதால் கொஞ்சம் நிதானமாக ஏற வேண்டும் ...
வாய்ப்பு கிடைக்கும் போது சென்று வாருங்கள் ...அருமையான இடம்
படங்கள் நல்லா வந்திருக்கு. செல்லவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுது.
ReplyDeleteதண்ணீர் பாட்டில்களோடுதான் ஏறணுமா இல்லை தண்ணி மற்ற வசதிகள் வழில இருக்கா? நம்ம கோவில்கள் மாதிரி சாப்பிட ஏதேனும் வசதி இருக்கா?