06 September 2023

3. கோகுலாஷ்டமி ---- கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்

ஜெய்  ஸ்ரீ  கிருஷ்ணா... 



கிருஷ்ணன் கோவிந்தன் ஆகிறான்

பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் எவ்வித கஷ்டமும் இன்றி பகவான் கிருஷ்ணரின் பாதுகாப்பில் மலைக்குடையின் நிழலில் ஆனந்தமாக இருந்தார்கள்.

 இவ்வாறு ஏழுநாட்கள் மழை தொடர்ந்து பெய்தது. ..........


பின்  கிருஷ்ணன் இந்திரனுக்குப் புத்திமதி சொல்லிக்கொண்டிருந்த சமயம், ஒரு பசு அங்கு வந்தது. 

அது சாதாரணப் பசு அன்று, தேவலோகப் பசு! 

அதன் பெயர் காமதேனு.

 காமதேனுக்கு ஒரு தெய்வீகச் சக்தி இருந்தது. யார் என்ன கேட்டாலும் அதனால் கொடுக்க முடியும். அதனால் மனிதக் குரலில் பேச முடியும். 

காமதேனு கிருஷ்ணனைப் பார்த்து, ‘எங்கள் அதிர்ஷ்டம் தான் நீங்கள் இடையர்குலத்தில் பிறந்தீர்கள். 

என் குழந்தைகளாகிய எல்லாப் பசுக்களையும் நீங்கள் காப்பாற்றுகிறீர்கள். 

நீங்கள் எங்களுக்குத் தேவதேனாவீர்கள்.

 தங்களை எங்கள் இந்திரனாக ராஜ்யாபிஷேகம் செய்யும்படி பிரம்மா கட்டளையிட்டிருக்கிறார்’ என்று சொன்னது.



பிறகு காமதேனு, தேவலோகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், தேன், பால் எல்லாவற்றினாலும் கிருஷ்ணனை அபிஷேகம் செய்தது.

 கங்கையிலிருந்து நீர் கொண்டு வரும்படி இந்திரன் தன் ஐராவதத்தை ஏவினான். 

ஐராவதம் ஒரு தங்கக் குடத்தில் கங்கை நீர் கொண்டு வந்தது.

 இந்திரன் அந்த நீரைக் கொண்டு கிருஷ்ணனை அபிஷேகம் செய்தான். 

பிறகு இந்திரன் கிருஷ்ணனைப் பார்த்து, ‘இன்றையிலிருந்து நீங்கள் கோவிந்தன் என்று அழைக்கப்படுவீர்கள். 

கோவிந்தன் என்றால் பசுக்களின் இந்திரன் என்று பொருள்.

 பசுக்களையும் இந்த உலகத்தையும் காப்பாற்றுவதனால் நீங்கள் கோவிந்தன் தான். நான் தேவர்களுக்கு மாத்திரம் தான் இந்திரன்.

 நீங்களோ உயிருள்ள எல்லா பிராணிகளுக்கும் இந்திரன்’ என்று சொன்னான்.






















ஸ்ரீ கிருஷ்ணர் பற்றிய பாசுரங்கள் 



துவரிக் கனிவாய் நிலமங்கை*  துயர் தீர்ந்து உய்ய பாரதத்துள்*
இவரித்து அரசர் தடுமாற*  இருள் நாள் பிறந்த அம்மானை*
உவரி ஓதம் முத்து உந்த*  ஒருபால், ஒருபால் ஒண் செந்நெல்*
கவரி வீசும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  9

1726



 துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்று இராது*  
தொழுமின்கள், தொண்டர்! தொலைய* 
உண முலை முன் கொடுத்த உரவோளது ஆவி* 
  உக உண்டு வெண்ணெய் மருவி,*
பண முலை ஆயர் மாதர் உரலோடு கட்ட*  
அதனோடும் ஓடி, அடல் சேர்,* 
இணை மருது இற்று வீழ நடை கற்ற தெற்றல்* 
 வினைப் பற்று அறுக்கும் விதியே. 9

1990










ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி திருக்கோயில்

 ஸ்ரீ சந்தானகோபாலன் 









ஸ்ரீ வித்யா இராஜகோபால சுவாமி




தொடரும் ....


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖


No comments:

Post a Comment