ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா...
`வெண்ணெய் பாத்திரத்தில் கையை நுழைத்தது ஏன்?’
ஒருமுறை... கோபிகை ஒருத்தியின் வீட்டுக்குள், அவள் இல்லாத நேரம் பார்த்து, சகாக்களுடன் நுழைந்தான் கண்ணன். அவர்கள் பெரு முயற்சி செய்து பானையைக் கீழே இறக்கி, வெண்ணெயைப் பகிர்ந்துகொள்ளும் நேரத்தில் கோபிகை வந்துவிடுகிறாள்.
அவளைக் கண்டதும் மற்றவர்கள் எப்படியோ தப்பித்து ஓடிவிட, கண்ணன் மட்டும் அகப்பட்டுக் கொள்கிறான். அவளிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று பகவான் யோசிக்க... அந்தப் பெண், கண்ணனிடம் ‘நீ யார்?’ என்று கேட்கிறாள்.
பலராமனின் பெயரைச் சொல்லி அவனுடைய தம்பி என்றான் கண்ணன். ஏன் அப்படிச் சொல்லவேண்டும். ஊருக்குள் பலராமனுக்கு நல்ல பெயர். எனவே, அவன் பெயரைச் சொல்லித் தப்பித்துவிடலாம் என்கிற எண்ணம் கண்ணனுக்கு.
ஆனால், அவள் விடுவதாக இல்லை. ‘இங்கு ஏன் வந்தாய்?’ என்று தனது இரண்டாவது கேள்வியைக் கேட்டாள்.
சற்றும் யோசிக்காமல்... ‘இந்த வீட்டை என்னுடைய வீடு என்று நினைத்து வந்துவிட்டேன்’ என்று பொய் சொன்னான் கண்ணன்.
உடனே அவள், ‘கண்ணா! உள்ளே நுழைந்தவுடனேயே இது உன் வீடு அல்ல என்று தெரிந்திருக்குமே..?’ என்று மடக்கினாள்.
கண்ணனும் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், 'தாயே! இது என் வீடல்ல என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன். எனவேதான், இதோ, இவ்வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டேன்’’ என்று நழுவப் பார்த்தான்.
கோபிகை விட்டுவிடுவாளா?!
"கண்ணா, நீ உன் வீடு என்று நினைத்து என் வீட்டுக்குள்ளே நுழைந்ததுகூடப் பரவாயில்லை. ஆனால், வெண்ணெய்ப் பாத்திரத்துக்குள்ளே நீ எதற்காக கைவிட்டாய்?’’ என்று கேட்டாள்.
என்ன பதில் சொல்வது என்ற குழம்பிய கண்ணன், ‘’அம்மா! என் கன்றுக்குட்டி ஒன்று தொலைந்துவிட்டது. ஒருவேளை, அது இந்த வெண்ணெய்ப் பாத்திரத்துக்குள் ஒளிந்துகொண்டு இருக்குமோ என்று பார்க்கத்தான் கலத்தினுள் கைவிட்டேன். கடைசியில் இங்குமில்லை. சரி, நான் வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு ஓடிப் போனான்.
கிருஷ்ணனின் லீலை எப்படி இருக்கிறது பாருங்கள்!
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன் தரிசனம்
முந்தைய பதிவுகள் ---
1. ஆயர்பாடி மாளிகையில் ..2023
2. கண்ணா.... கருமை நிறக் கண்ணா.. 2023
3. கோகுலாஷ்டமி - கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் 2023
4. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி --- எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்கள் ..... 2023
5. குறையொன்றும் இல்லை கண்ணா.... 2023
மாய கண்ணன் ---- சாட்சி பூதம் .... 2022
ராதையின் கண்ணன் .... 2022
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ... 2022
கோபாலன் ......2022
யசோதையின் கண்ணன் ....2022
கண்ணன் வருவான் ... 2022
பெரியாழ்வார் திருமொழி
இரண்டாம் பத்து
2-3 .மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
காதுகுத்துதல் - பன்னிருநாமப் பாடல்
139
போய்ப்பாடு உடைய நின் தந்தையும் தாழ்த்தான்*
பொரு திறல் கஞ்சன் கடியன்*
காப்பாரும் இல்லை கடல்வண்ணா* உன்னை
தனியே போய் எங்கும் திரிதி*
பேய்ப் பால் முலை உண்ட பித்தனே!* கேசவ
நம்பீ! உன்னைக் காது குத்த*
ஆய்ப் பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார்*
அடைக்காய் திருத்தி நான் வைத்தேன் (2) 1
140
வண்ணப் பவளம் மருங்கினிற் சாத்தி*
மலர்ப் பாதக் கிண்கிணி ஆர்ப்ப*
நண்ணித் தொழும் அவர் சிந்தை பிரியாத*
நாராயணா! இங்கே வாராய்*
எண்ணற்கு அரிய பிரானே* திரியை
எரியாமே காதுக்கு இடுவன்*
கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய*
கனகக் கடிப்பும் இவையாம்! 2
141
வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும்*
மகரக் குழை கொண்டு வைத்தேன்*
வெய்யவே காதில் திரியை இடுவன்* நீ
வேண்டிய தெல்லாம் தருவன்*
உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய*
ஒண் சுடர் ஆயர் கொழுந்தே*
மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து*
மாதவனே! இங்கே வாராய் 3
No comments:
Post a Comment