வாழ்க வளமுடன்
![]() |
முந்தைய பதிவுகள்...
2.ஊட்டி படகு நிலையம்
3.ஊட்டி பைன் மரக்காடு
4.ஊட்டி ஷூட்டிங் ஸ்பாட்
5. பைக்காரா அணை
13 . ஊட்டி குதிரைப்பந்தயத் திடல் (Ooty Racecourse)
ஊட்டியில் ஓர் உயர்நிலத்தில் கட்டப்பட்டுள்ள குதிரைப்பந்தயத் திடல், கோடைகால பந்தயங்களுக்காக கடல் மட்டத்திலிருந்து 2,268 மீட்டர் உயரத்தில் நகரத்தின் மையப்பகுதியான ஊட்டி தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இத்திடல் அமைந்துள்ளது.
இத்திடலின் 100 ஆண்டு கால வரலாறு குறிப்பிடத்தக்க பல அரிய தனித்தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது.
1980 ஆம் ஆண்டுகள் இத்திடலின் பிரமாண்டமான வளர்ச்சியைக் காண முடிகிறது. இக்காலத்தை ஊட்டி குதிரைப் பந்தயத்தின் பொற்காலம் என்று குறிப்பிடலாம். இக்காலத்தில் சூன் மாதம் வரையில் பந்தயப் பருவம் நீட்டிக்கப்பட்டது. இதனால் நீல மலையில் சுற்றுலா என்பதைத் தாண்டி ஆயிரக்கணக்கான கோடைக்கால வேலை வாய்ப்புகள் இணைப்பை உருவாகின. தொழில்முறை பந்தய வீரர்கள் பந்தயத்தை எதிர் நோக்கி இங்கு தங்கத் தொடங்கினர்.
கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக பாரம்பரியமாக மக்கள் சுற்றுலா வரும் ஏப்ரல் முதல் சூன் வரையிலான கோடைக்காலப் பருவத்தில் குதிரைப் பந்தயங்கள் இங்கு நடத்தப்பட்டன.
இந்த பந்தயத்திடல் ஊட்டியின் மத்தியில் 55 ஏக்கர் பரப்பளவில் 2.4 கிலோமீட்டர் நீளம் கொண்ட்தாக அமைந்துள்ளது.
இந்தியாவிலுள்ள மிகவும் புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானங்களில் ஊட்டி குதிரைப் பந்தய மைதானமும் ஒன்றாகும்.
நீலகிரி தங்கக் கோப்பை குதிரைப் பந்தயம் இங்கு நடத்தப்படும் பந்தயங்களில் பாரம்பரியமாகப் புகழ்பெற்றதும் பிரபலமானதுமான பந்தயமாகும்.
ஆனால் தற்பொழுது வாசித்த செய்திகளின் படி அங்கு போட்டிகள் நடைபெறவில்லை எனவும் அதனை சூழல் பூங்காவாக மாற்றும் செயல்கள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
நாங்கள் சென்ற பொழுது நேரிடையாக போட்டிகளை கண்டோம். எங்களுக்கு அங்கு செல்லும் திட்டம் ஏதும் இல்லை ஆனால் நேரம் இருந்ததில் உள்ளே சென்று அந்த காட்சிகளை கண்டோம் உண்மையில் மிக அருமையாக இருந்தது.
தொடரும்.....
அனுபிரேம் 💞💞
No comments:
Post a Comment