வாழ்க வளமுடன்
முந்தைய பதிவுகள்...
அடுத்தநாள் எங்கள் பயணத்தின் காட்சிகளில் இன்று ஊட்டி பைன் மரக்காடு ..
ஊட்டி நகரின் மையப் பகுதியிலிருந்து சுமார் 15 நிமிட பயண தூரத்தில் உள்ள இந்த பைன் காடுகளுக்குச் செல்லலாம்.
ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பைன் மரங்கள் அடர் பச்சை நிறத்தில் ஊசி போன்ற இலைகளும், உயரமாகவும், நேராகவும் வளரும் தன்மை கொண்டது.
மிகவும் சரிவான அமைப்பாக உள்ளது இந்த இடம் . வயதானவர்கள் நடக்க சிரமமான இடம். இந்த சரிவில் நடந்து சென்றால் ஒரு ஏரி அங்கு உள்ளது.
இவ்வளவு அழகான இந்த பைன் மரங்கள் ஊசி போன்ற இலைகளைத் தொடர்ந்து உதிர்ப்பதால் மரத்துக்கு அடியில் இலைகள் அடுக்குகளாகச் சேர்ந்து தரையில் புல் பூண்டுகள்கூட வளரவிடாமல் செய்கிறது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் பைன் மரக்காடுகள் பறந்து விரிந்து கிடந்தாலும் எந்தப் பயனும் இல்லை. ஒரு முயல்கூட இந்தக் காட்டில் வாழமுடியாத நிலை ஏற்படுகிறது என்று சில தகவல்கள் கிடைக்கின்றன. நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சி வன விலங்குகளின் வாழ்விடத்தை நிர்மூலமாக்கும் பைன் மரக்காடுகள் பசுமைப் பாலைவனமாகவே உள்ளது.
தொடரும்.....
அனுபிரேம் 💞💞
படங்களும் பகிர்வும் அருமை. அழகான பைன் மரங்களால் வனவிலங்குகள் தங்கள் வாழ்விடத்தை இழப்பது சோகம். 'பசுமைப் பாலைவனம்' பொருத்தமான
ReplyDeleteபெயராக உள்ளது.
நன்றி சகோ
Deleteபடங்களும், விவரங்களும் அருமை.
ReplyDeleteஆங்கிலேயரால் அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம் என்றால் நிலத்ஹ்க்ட்டி நீரை உறிஞ்சி விடுமே என்று நினைத்தேன். அதுபோலவே கடைசியில் சொல்லி இருக்கிறீர்கள். யூகலிப்டஸ், வேலிகாத்தான் போன்ற தாவரங்கள் இவ்வகைப் பட்டவையே..
காணொளியில் வரும் 'வேறென்ன வேண்டும்' பாடல் பழைய 'ஒத்தையடிப் பாதையிலே ஊருசனம் போகையில்' பாடலை சற்றே நினைவு படுத்துகிறது.
பார்க்க அழகா இருக்கு ஆனாலும் இயற்கைக்கு ஏற்ப இல்லை ஸ்ரீராம் சார் ...
Deleteபைன் மரக்காடுகள் அங்கு ஒரு சுற்றுலா இடமாகவே ஆக்கியிருக்காங்க அனு அதனாலதான் அதன் பின் விளைவுகள் இருந்தாலும் கண்டுக்கறதில்லை சுற்றுலாத்துறை.
ReplyDeleteகாணொளிகளும் சூப்பர். அனு, இரண்டாவது காணொளியில் மூங்கில் காடுகள் நு போட்டிருக்கீங்க ?!
கீதா
ஆமாம் அக்கா ...அது அப்போ மூங்கில் காடுகளே ன்னு தோணியதில் அப்படியே போட்டாச்
Deleteபடங்கள் காணொளிகள் சூப்பர்.
ReplyDeleteகீதா
நன்றி அக்கா
Delete