07 April 2025

4.ராம நாம பாயஸக்கே...

வடுவூர் ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திவ்ய தரிசனம் 






1. ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)


 2. ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி

சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ (ராம)


3. ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு

புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு

ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக

ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)


இந்தப் பாட்டில் பாயசம் செய்வதற்கான சமையல் குறிப்பைச் சொல்லி, அதே போல் இறைவனின் நாமங்களை உச்சரிக்க வேண்டிய வழிமுறைகளையும் விளக்குகிறார் தாசர்.


பொருள்:

1.ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்; விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்).

2.கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக

3.இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு (சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள்




3-9 பெரியாழ்வார் திருமொழி 

ஒன்பதாம் திருமொழி - என் நாதன் உந்தி பறத்தல் 


 3 14

தார்க்கு இளந்தம்பிக்கு*  அரசு ஈந்து*  தண்டகம்- 
நூற்றவள்*  சொற் கொண்டு போகி*  நுடங்கு இடைச்- 
சூர்ப்பணகாவைச்*  செவியொடு மூக்கு*  அவள்- 
ஆர்க்க அரிந்தானைப் பாடிப் பற* 
அயோத்திக்கு அரசனைப் பாடிப் பற.*8


315  
          
மாயச் சகடம் உதைத்து*  மருது இறுத்து* 
ஆயர்களோடு போய்*  ஆநிரை காத்து*  அணி- 
வேயின் குழல் ஊதி*  வித்தகனாய் நின்ற* 
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற* 
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற.* 9


316

காரார் கடலை அடைத்திட்டு*  இலங்கை புக்கு* 
ஓராதான் பொன்முடி*  ஒன்பதோடு ஒன்றையும்* 
நேரா அவன்தம்பிக்கே*  நீள் அரசு ஈந்த* 
ஆராவமுதனைப் பாடிப் பற* 
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற.* 10


317

நந்தன் மதலையைக்*  காகுத்தனை நவின்று* 
உந்தி பறந்த*  ஒளியிழையார்கள் சொல்* 
செந்தமிழ்த் தென்புதுவை*  விட்டுசித்தன் சொல்* 
ஐந்தினோடு ஐந்தும் வல்லார்க்கு*  அல்லல் இல்லையே.* (2) 11


ஸ்ரீ ராம நாம மகிமை.. ..2018










ராம ராம ஜெய ராஜாராம்
ராம ராம ஜெய சீதா ராம்....
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !


அன்புடன் 
அனுபிரேம் 💖💖

1 comment: