09 April 2025

ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை 2025

 ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்-- பங்குனி திருநாள் (ஆதி பிரம்மோற்சவம்) 6-ம் நாள் (8.4.2025) மாலை 

ஸ்ரீநம்பெருமாள் - ஸ்ரீகமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை 

நம்பெருமாள் உறையூர் புறப்பாடு





நம்பெருமாள்  உறையூர் கமலவல்லி நாச்சியார்  சேர்த்தி  சேவை 

அருள்மிகு உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில்,

உறையூர் சீருடன் மாப்பிள்ளையாக நம்பெருமாள் 

பங்குனி - ஆயில்யம் - நிசுளாபுரி பேரரசி  ஶ்ரீ கமலவல்லி நாச்சியார் திருநக்ஷத்ரம்.











நம்பெருமாள் மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார்.

பின்னர் தான் அணிந்த மலர் மாலையை கமலவல்லி நாச்சியாருக்கு அணிவித்து, நாச்சியாரின் மாலையை தான் வாங்கி அணிந்துக்கொள்வார்.

பின்னர் இருவரும் திருமணக் கோலத்தில் "சேர்த்தி சேவை" சாதிப்பார்கள்.


உறையூர் நாச்சியார் பற்றி 

1. நிசுளாபுரி மாஹாத்மியம்

ஒரு காலம் பிருகு முனிவர்  விஷ்ணுவினிடம் போனார். விஷ்ணு பிருகுவை உபசரித்து, வந்த காரியம் வினவுகையில், தனியாய்த் தெரிவிக்க வேண்டுமென்றார் ரிஷி. எல்லாரும் அப்பால் சென்றார்கள். காந்தனோடு ஏகாந்தமாயிருக்கும் ஸமயம் அதுதானென்று கண்ட லக்ஷ்மி பிருகுவை அப்பால் போகச் சொன்னாள். பிருகு கோபித்துக்கொண்டு, மனுஷிய ஜாதியில் பிறப்பாய் என்று சபித்து, விஷ்ணுவே பரதத்வம் என்று சொல்லிக்கொண்டு போனார்.

 லக்ஷ்மி  ரிஷியின் சாபத்தினால் மிகவும் கவலைப் பட்டாள்.

விஷ்ணு - பிருகு சாபம் தப்ப முடியாது. பூலோகத்தில் பிறந்திரு. நானும் அங்கே வந்து உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன். கொஞ்ச நாள் பூலோகத்திலிருந்து இங்கே வருவோம்.

லக்ஷ்மி - கேவலமான மனுஷ்யனுக்கு நான் எவ்விதம் பிறப்பது!

விஷ்ணு - கராஸுரனை அகஸ்தியர் வடக்கே அனுப்பிக் கராரண்யத்தை ரிஷிவாஸத்துக்குத் தகுதி யாக்கினபிறகு, சோழராஜனான தர்மவர்மா என்னும் பக்தன் கும்பகோணத்தைவிட்டுக் காவேரியின் தென் கரையில் நகரம் ஸ்தாபித்துத் தன் பத்தினி நிசுளையின் பெயரால் நிசுளாபுரி எனப் பெயரிட்டு அரசு செலுத்துகிறான். அவனும் மனைவியும் ஸந்ததியில்லாக் குறையினால் "லக்ஷ்மீ தந்த்ரம்" என்னும் சாஸ்திரத்தின்படி உன்னைப் பூஜிப்பார்கள். நீ அவர்களுக்குப் பெண்ணாய் பிற - நானும் அங்கே வருகிறேன்.

அப்படியே நிசுளாதேவியின் கர்பத்தில் சித்திரை, சுக்லத்வாதசி, உத்தரம்-கூடிய வெள்ளிக் கிழமையில் லக்ஷ்மி அவதரித்தாள். 

அவளுக்கு வாஸலக்ஷ்மி எனப் பெயரிடப்பட்டது. பிறகு சந்திர திலகன் என்ற புத்திரன் பிறந்தான். தர்மவர்மா ரங்கநாதனிடம் உத்தமமான பக்தனாயிருந்தான். வாஸ லக்ஷ்மி ரங்கநாதனையே விரும்பிக் கலியாணம் செய்து கொண்டாள்.

2. திவ்யஸூ-ரி சரிதம்

தர்மவர்மாவின் வம்சத்தவனான நந்த சோழனுக்கு உறையூர் நாச்சியார் கிடைத்ததாகக் கோயிலொழுகு மற்றும்  தர்மவர்மாவுக்குக் கிடைத்ததாக திவ்யஸுரி சரிதம் 7-ம் ஸர்கம், மற்றை விவரம் கோயிலொழுகு போலவே. இருக்கிறது .. 

 உடையவர் காலத்தில் உத்தம நம்பி வம்சத்திலிருந்த கருடவாஹன பண்டிதரால் ஆழ்வார் ஆசார்யர்களின் சரித்திரம் இந்தக் காவ்யமாக எழுதப்பட்டது.

3. கோயிலொழுகு

"நிசுளாபுரியிலே தர்மவர்மாவின் வம்சரான நந்த சோழன் சாஜ்யம் பண்ணுகிற காலத்தில் பகுகாலம் அகபத்யனாயிருந்து ஸ்ரீரங்கராயகரிடத்திலே அதிப் பிரவணனாய் தபஸ்ஸைப் பண்ணி, அந்த தபோ பலத்தினாலே ஒருநாள் தாமரை ஓடையில் தாமரைப்பூவிலே ஒரு சிசுவாக ஸ்திரீ ப்ரஜை இருக்கக்கண்டு, அந்த ராஜா ஹ்ருஷ்டனாய், அந்தக் குழந்தையைத் தம்முடைய கிருமத்திலே கொண்டு வந்து கமலவல்லியென்று நாம காணம் பண்ணி வளர்க்குமிடத்தில்,- 

அந்தக் குழந்தையும் வளர்ந்து பெரியவளாய் ஒத்த பெண்களுடனே விளையாடும் காலத்திலே, - ஒருகாள் தோழிகளுடனே விலோத்யாகத்தில் புஷ்பாபசயம் பண்ணுகிற ஸமயத்திலே, - ஸ்ரீ ரங்காராஜர் குதிரை நம்பிரான்மேலே ஏறியருளி பலாச தீர்த்தத்துக்கு (ஜீயர்புரத்துக்கு) வேட்டை எழுர்தகுளுகிறவர்தக் கமலவல்லிக்கு அதிஸுந்தரராய் விபலாவதாரமாக ஸேவை சாதிக்க, சுமலவல்லி கண்டு மோஹித்து 

மஹா பிரயத்னத்தினாலே தோழிமார் தேற்றத் தேர்ந்து, தன் விடுதியிலே வந்து உன்மத்தைபோலேயிருக்க, அந்த ராஜாவும் கமல வல்லியைக்கண்டு மன்மத விகாரம் என்று கணித்து, உனக்கு ஆர்மேலே மனஸு ” இருக்கிறது?!-என்று கேட்க,

 கமலவல்லி தனக்கு ‘ஸ்ரீரங்கராஜான்றியிலே ஒருத்தரிடத்திலேயும் மனஸு இல்லை'; தன்னை 'ஸ்ரீரங்கராஜருக்குப் பாணிக்ரஹணம் பண்ணுய்யும்' என்று சொல்ல, 

ராஜாவும் ஸந்துஷ்டனாய் தன் மந்திரிகளுடனே ஆலோசித்து, தம்முடைய குமாரத்தி கமலவல்லியை ஸ்ரீரங்கராஜருக்கு கன்னிகாப்ரதானம் பண்ணுவித்து பெண்ணைக் கோயிலுக்கு அனுப்பும் போது, 

ஸ்திரீ தனமாக முன்னூற்றுப் பதின்கலம் தங்க அமுதுபடியும், அதுக்கு வேண்டின பருப்பமுதும், கொம்பஞ்சு கொடியஞ்சு கறியமுதும், அதுக்கு வேண்டின சம்பாரங்களெல்லாம் தங்கத்தாலே பண்ணுவித்து அதுகளையும், ஸ்திரிகளுக்கு ஸமங்களான  நூறுபரிசாரிகைகளையும் கொடுத்தனுப்பி வைக்க,

அந்தக் கமலவல்லியும் கோயிலிலே வந்து திருமண்ணுக்குள்ளே (திருமணத்தூணுக்குள்ளே ?) புகுந்து அத்ருச்யை யாக,- அத்தைக் கண்டு ராஜாவும் அதிஸந்துஷ்டனாய அஃபத்யஞ்கையாலே தம்முடைய ஸர்வஸ்வத்தையும் பெருமாள தீனம் பண்ணி,-

திருமாமணி மண்டபங்களும், திருமதிள்களும், திருக்கோபுரங்களும், திரு நந்தவனங்கள் முதலானதுகளையும் கட்டிவைத்து,-

தம்முடைய பட்டணமான உறையூரிலேயும் தம்முடைய குமாரத்தியையும் அதிஸுந்தர ரூபத்தினாலே வசீகரித்தபடியாலே அழகிய மணவாளப் பெருமாளையும் பிரதிஷ்டிப்பித்து, விமான கோபுர மண்டப ப்ராகாகாராதிகளையும் விஸ்த்ருதமாகக் கட்டிவைத்து அனைத்தழகும் கண்டருளப் பண்ணிக் கொண்டிருந்தான்."



நேற்று நடைப்பெற்ற ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவையின் அதி அற்புத படங்களையும், தகவல்களை பகிர்ந்தோருக்கும் நன்றிகள் பல. 

1762


கோழியும் கூடலும் கோயில் கொண்ட 
கோவலர் ஒப்பர் குன்றம் அன்ன *
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர் 
பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் *
வாழியரோ! இவர் வண்ணம் எண்ணில் 
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய *
ஆழி ஒன்று  ஏந்தி ஓர் சங்கு பற்றி 
அச்சோ , ஒருவர் அழகியவா! 


ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் - ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்

 திருவடிகளே சரணம் !!


அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. புராணம் சுவாரஸ்யம். சேங்காலிபுரம் ​அனந்தராம தீக்ஷிதர் பிரவசனம் கேட்பது போன்ற நடை!

    அதுசரி, லஷ்மி கேவலமான மனுஷ்யன் என்று சொல்வாரா? சொல்லலாமா?

    ReplyDelete
    Replies
    1. இங்கு பதிவிடும் பொழுது எனக்கும் அந்த சந்தேகம் வந்தது ஸ்ரீராம் சார், ஆனால் லக்ஸ்மி தேவி கூறினால் சரியாக இருக்கும் என்று எதையும் மாற்றாமல் அப்படியே பதிவிட்டுவிட்டேன்.

      Delete
  2. இக்கதையும் தெரிந்து கொண்டதுண்டு, அனு, பாட்டியிடம் இருந்து. ஆனால் இத்தனை விரிவாக விவரணச் சொற்களோடு அல்ல...கதையாக !!!!!

    எல்லாரையும் படைக்கும் தாயாக இருக்கும் மாபெரும் சக்தி அப்படி ஒரு வாக்கியத்தைச் சொன்னதாக அறிந்ததில்லை புதுசா இருக்கு இப்ப அதை வாசிக்கறப்ப.

    நான் புராணமும் சரி வரலாறும் சரி எதை வாசித்தாலும், எழுதுபவர்களின் கோணத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்பதையும் நாம் கொள்ளலாமோ?

    படங்கள் எல்லாம் விவரங்களும் நல்லாருக்கு. நிஜ்மா உங்களைப் பாரட்டுகிறேன் எதுக்குன்னா பொறுமையா எல்லாம் தட்டச்சுகிறீர்களே அதுக்கு!!!!!

    எனக்கு இப்ப அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு. போய்வந்த பதிவு போடக் கூட...ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete