05 April 2025

சக்கரவர்த்தி திருமகன்

 திருவஹீந்திரபுரம் ஸ்ரீ ராமன்பிரான் 














ஸ்ரீராமாயணத்தில் வீபீஷணன் சரணாகதி செய்த சமயமது!

சக்கரவர்த்தி திருமகன், வானர சேனைகளை திரட்டி, வீபீஷணனை நமது கோஷ்டியில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்று ஆலோசித்த சமயமது!

ஒவ்வொருவரும் தமது விருப்பங்களை/ ஆலோசனைகளை கூறினர்.

(சக்கரவர்த்தி திருமகனுக்கு வீபீஷணனை எற்று கொள்ள வேண்டும் என்பது திருவுள்ளம். எனிலும், அதனை வானரர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவல்.)

வயதில் மூத்தவரான ஜாம்பவான் "இராம! இந்த விபீஷணனின் அண்ணன் இராவணன் தானே, தங்கள் மனைவியை அபகரித்துச் சென்றான். ஆனால், இன்றோ தங்களால் அந்த விபீஷணனுக்கு எவ்வாறு கருணை காட்ட முடிகிறது?" என்றார்.

இராமன் " மதி மிகுந்த ஜாம்பவானே! நீ கேட்பது நியாயமான கேள்வி தான். ஆனால், இதற்கு விளக்கம் தர வேதத்தில் இருந்து உனக்கு ஒரு கதையை சொல்கிறேன். கேள்" என்று வேதத்தில் சொன்ன கதையை கூற ஆரம்பித்தார்.


ஒரு காட்டில் ஆண் புறாவும், பெண் புறாவும் ஆனந்தமாக வாழ்ந்து வந்தன. அப்போது, அந்த வழியாக வந்த வேடுவனின் கண்களில் அந்தப் பெண் புறா பட்டு விட்டது. உடனே, அக்கணமே  அந்த வேடுவன் அந்தப் பெண் புறாவை தனது பாணத்தால் கொன்றான். அந்த வேடுவனை எதிர்க்கத் திராணி இல்லாதததால் பல மணி நேரமாக அழுது துடித்தது. பிறகு அந்தப் புறா ஒரு முடிவுக்கு வந்தது "தனது துணையே போன பின்பு தனக்கு இந்த உலகில் என்ன வேலை" என்று நினைத்தது.

அப்போது இரவுப் பொழுதும் தொடங்கியது. வேடனால் இருளில் காட்டுக்குள் வெகு தூரம் செல்ல முடியவில்லை. அப்போது குளிரும், பசியும் அவனை வாட்டி எடுத்தது. மிகவும் சோர்ந்து, ஆண் புறா இருக்கும் மரத்தடியில் வந்து அமர்ந்தான். தன்னுடைய கூட்டிலிருந்து உலர்ந்த சுள்ளிகளை அவன் அருகில் போட்டு, அதில் தீமூட்டி குளிர் காயும் படி செய்தது. ஆனால், பசியிலிருந்து விடுபடும் வழி தெரியாமல் துடித்தான். அப்போது, அந்தக் காட்சியைக் கண்ட அந்த ஆண் புறா, தான் மூட்டிய தீயில், தன் உடலையே இட்டு, அவனுக்கு ஆகாரமாகவும் தன்னை ஆக்கிக்கொடுத்தது.

அங்கு ஊர்வன இனத்தை சேர்ந்த ஒரு புறா!, இங்கு உயர்குல தோன்றலான வசிஷ்ட சிஷ்யன் நான்.

அங்கு வேடன் சரணம் என்று ஒரு வார்த்தை கூடச்சொல்லவில்லை. இங்கு விபீஷணன் முறைப்படி சரணம் பற்றி இருக்கிறார்.

அங்கு வந்த வேடன் தான் துணையை பிரித்த விரோதி, இங்கு வந்தவன் ராவணனன்று, அவன் தம்பி.

ஐந்தறிவே கொண்ட ஆண் புறா தானே வலியச் சென்று நெருப்பில் விழுந்து அந்த வேடனுக்கு இரையாக மாறி, அவனது பசியை தீர்த்தது என்றால் , நான் ஆறறிவு படைத்த மனித பிறவியான நான் என்ன செய்ய வேணும் என்பதை நீயே சொல்லுவாயாக" என்றார்.

(அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அந்திம(கடைசி) தசையில் இருந்த சமயமது. 

அப்போது அவருடைய சிஷ்யர்கள், அவரிடம் "ஸ்வாமி! தேவரீரின் திருவுள்ளத்திலே ஓடுகிறது என்ன" என்று கேட்டனர். 

அவர் அதற்கு "ஒரு பக்ஷி பெருமாளுடைய திருவுள்ளத்தை புண்படுத்திய என்" என்று கிடந்தேன் என்றாராம்.

"ஒரு பக்ஷி தன்னிடம் வந்தவனுக்குச் செய்ததை நான் உடனே செய்யாமல், குரங்குகளுடன் ஆராய்ந்து கொண்டிருந்தது பற்றி பெருமாள்(இராமன்) மனம் வெதும்பியதை நினைத்தேன்." என்றாராம்.)




3-9 பெரியாழ்வார் திருமொழி 

ஒன்பதாம் திருமொழி - என் நாதன் உந்தி பறத்தல் 

307

 என் நாதன் தேவிக்கு*  அன்று இன்பப்பூ ஈயாதாள்* 
தன் நாதன் காணவே*  தண்பூ மரத்தினை*
வன் நாதப் புள்ளால்*  வலியப் பறித்திட்ட* 
என் நாதன் வன்மையைப் பாடிப் பற* 
எம்பிரான் வன்மையைப் பாடிப் பற.* (2) 


308

என் வில் வலி கண்டு*  போ என்று எதிர்வந்தான்* 
தன் வில்லினோடும்*  தவத்தை எதிர்வாங்கி* 
முன் வில் வலித்து*  முதுபெண் உயிருண்டான்* 
தன் வில்லின் வன்மையைப் பாடிப் பற* 
தாசரதி தன்மையைப் பாடிப் பற.*


ஸ்ரீ ராம நாம மகிமை.. ..2018















ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !



அன்புடன் 
அனுபிரேம் 💖💖

No comments:

Post a Comment