14 April 2025

விஸ்வாவசு ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் !!

 விஸ்வாவசு ஆண்டு தமிழ்ப்  புத்தாண்டு -வாழ்த்துகள் !!


நம்பெருமாள் சித்திரை முதல் நாள் ஆஸ்தான மண்டப சேவை




"விஸ்வாவசு"  என்றால் தமிழில் "எங்கும் நிறைந்தவன்" அல்லது "எல்லாவற்றையும் உடையவன்" என்று பொருள்.

அண்டங்கள் முழுவதும் அங்கிங்கு எனாதபடி நிறைந்திருப்பவர்--அனைத்து ஆத்மாக்களிலும் நிறைந்திருப்பவர்--அனைத்தையும் தம்முள் தம் உடமைகளாக வைத்திருப்பவர்; விஸ்வம் எங்கும் வியாபித்திருப்பவர் எம்பெருமான் ஸ்ரீ மஹா விஷ்ணு !!!

 விஸ்வாவசு ஆண்டு வெண்பா !

விஸ்வாவசு ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் அறுபது வருட வெண்பா:

"விசுவாவசு வருடம் வெள்ளாண்மை ஏறும்

பசுமாடுமாடும் பலிக்கும் - சிசு நாசம்

மற்றையரோ வாழ்வார்கண் மாதவங்கண் மீறுமே

உற்றுவகினல்ல மழை யுண்டு ! ”.

இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில்,

உலகெங்கும் நல்லமழை பெய்து விவசாயம் தழைக்கும். பசு மற்றும் காளை உள்ளிட்ட கால்நடைகள் பெருகும். குழந்தைகளை வினோத நோய்கள் தாக்கும். பகைவர்களை சிலர் ஆதரிப்பர். ஒரு பக்கம் தவநெறிகள் ஓங்கி உயர்ந்தாலும் மறுபக்கம் நல்லதும் கெட்டதும் .இது பொதுவான பலன். இதைக் கண்டு பயப்படத்தேவையில்லை. பெரிய பெருமாள் இந்தப் பகைகளால் நமக்கு எந்தக் கேடும் வராமல் காப்பார் என்பது திண்ணம் !!


காஞ்சி ஸ்ரீ தேவப்பெருமாள் 











2087 

ஒன்றும் மறந்தறியேன்*  ஓதநீர் வண்ணனைநான்,* 
இன்று மறப்பனோ ஏழைகாள்* - அன்று-
கருஅரங்கத்துள் கிடந்து*  கைதொழுதேன் கண்டேன்*
திருவரங்கம் மேயான் திசை.


2260

பின் நின்று தாய் இரப்ப கேளான்,*  பெரும் பணைத் தோள்-
முன் நின்று தான் இரப்பாள்*  மொய்ம் மலராள்*  - சொல் நின்ற-
தோள் நலத்தான்*  நேர் இல்லாத் தோன்றல்,*  அவன் அளந்த-
நீள் நிலம் தான்*  அத்தனைக்கும் நேர்.   


2411

அவன் என்னை ஆளி*  அரங்கத்து அரங்கில்* 
அவன் என்னை எய்தாமல் காப்பான்*  அவன் என்னது
உள்ளத்து*  நின்றான், இருந்தான் கிடக்குமே* 
வெள்ளத்து அரவுஅணையின் மேல்.   


 ஸ்ரீ நம்பெருமாள் ஶ்ரீ ரங்கநாயகித் தாயார்
  திருவடிகளே சரணம் !!



அன்புடன்
அனுபிரேம் 💕💕💕💕💛

6 comments:

  1. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! விசுவாவசு ஆண்டின் பெயர் காரணம் அறிந்து கொண்டேன் - படங்களும் பகிர்வும் அருமை. நன்றி.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    தங்களுக்கும், மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். படங்களும், பதிவும் அருமை. இவ்வருடமாக மலர்ந்த விஸ்வாவசு புத்தாண்டு விளக்கம் படித்தறிந்து கொண்டேன். இறைவனின் தரிசனம் பெற்றுக் கொண்டேன். பெருமாள் அனைவருக்கும் நல்லதையே நடத்தி தர வேண்டுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி கமலா அக்கா

      Delete
  3. விசுவாவசு பெயரின் பெருமை அருமை.  நான்கு வரிகளில் பொதுவான ஆண்டு பலன் முன்னரே தந்திருக்கிறார் இடைக்காட்டு சித்தர்.  அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்

      Delete