அனுவின் தமிழ் துளிகள்.....
சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....
01 April 2025
1500 வது பதிவு ...
வாழ்க வளமுடன்..
இன்றைய பதிவு 1500 வது பதிவு.
1001 வது பதிவு 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பதிவு செய்து இருக்கிறேன். அடுத்த 500 பதிவுகள் எழுத 3 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன.
12 ஆண்டுகளாக இங்கு தொடர்ந்து சின்ன சின்ன பதிவுகளாக எழுதி வருகிறேன். புதிதாக அறிந்துக் கொள்ள என ஆரம்பித்த ஒரு விசயம் இன்று வளர்ந்து 1500 படிகள் தாண்டி நிற்கிறது என்பதே மிக மகிழ்ச்சி. இங்கு பதிவு இடுவதன் மூலம் நான் அறிந்துக் கொள்ளும் செய்திகளும், அனுபவங்களும் என்னை நேர்மறை எண்ணங்களுடன் நடை இட செய்கிறது. நல்ல வழிகாட்டியாக இந்த தளம் என்னை வழி நடத்துகிறது என்பதில் எனக்கு ஐயம் ஏதும் இல்லை. இந்த கற்றலில் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் அனைவருக்கும் நன்றிகள் பல.
inner peace
அழகு
இளைப்பாறும் நேரம்
ஜெய் ஹனுமான், hsr layout, பெங்களூரு
கப்பன் பார்க்
தொடர்ந்து இன்னும் நல்ல பல செய்திகளையும், இடங்களையும், திருக்கோவில்களையும், ஆச்சாரியர்களையும் இங்கு அறிய இறைவன் அருள் புரியட்டும்.
மேலும் இனிய கருத்துரைகளை வழங்கி ஊக்கப்படுத்தும் நட்புகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றிகள் ....
பதிவு அருமை. முதலில் உங்களின் 1500வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்னமும் நிறைய பதிவுகளை எழுதி பல ஆயிரக்கணக்கில் தங்கள் பதிவுகள் முன்னேற வேண்டுமென வாழ்த்துகிறேன். அதற்கு உங்களுக்கு இறைவனையும் துணையாக இருக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
உங்கள் பதிவுகளில் எத்தனை கோவில் பதிவுகள், இறை சம்பந்தபட்ட பதிவுகள், இறைவனின் அடியார்கள், ஆழ்வார்கள் பற்றிய பக்திப் பதிவுகள், சுற்றுலா பதிவுகள் என நிறைய பதிவுகளை தந்து எங்களை சந்தோஷபடுத்தியிருக்கிறீர்கள். அதற்கு நாங்களும் உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகளை தெரியப்படுத்தி கொள்கிறோம்.
மேலும், மேலும் உங்கள் எழுத்துக்கள் வளம் பெற்று திகழ வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கண்ணன் படமும் கண்ணனைப்பற்றிய பாரதியின் பாடலும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. முதலில் உங்களின் 1500வது பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்னமும் நிறைய பதிவுகளை எழுதி பல ஆயிரக்கணக்கில் தங்கள் பதிவுகள் முன்னேற வேண்டுமென வாழ்த்துகிறேன். அதற்கு உங்களுக்கு இறைவனையும் துணையாக இருக்க வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
உங்கள் பதிவுகளில் எத்தனை கோவில் பதிவுகள், இறை சம்பந்தபட்ட பதிவுகள், இறைவனின் அடியார்கள், ஆழ்வார்கள் பற்றிய பக்திப் பதிவுகள், சுற்றுலா பதிவுகள் என நிறைய பதிவுகளை தந்து எங்களை சந்தோஷபடுத்தியிருக்கிறீர்கள். அதற்கு நாங்களும் உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த நன்றிகளை தெரியப்படுத்தி கொள்கிறோம்.
மேலும், மேலும் உங்கள் எழுத்துக்கள் வளம் பெற்று திகழ வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கண்ணன் படமும் கண்ணனைப்பற்றிய பாரதியின் பாடலும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ
ReplyDeleteவாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் அனு ப்ரேம்குமர். தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDelete