11 April 2025

பங்குனி சேர்த்தி சேவை

ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் - ஸ்ரீ ரெங்க நாச்சியார் தாயார் சேர்த்தி சேவை 2025 ....




பெரிய பெருமாள் !
********************

                            திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே

செய்ய விடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே

இரு விசும்பில் வீற்றிருக்கு இமையவர் கோன் வாழியே

இடர் கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே

அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே

அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே

பெருகி வரும் பொன்னி நடுப் பின்துயின்றான் வாழியே

பெரிய பெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே



பெரிய பிராட்டியார் (பங்குனி – உத்ரம்)

பங்கயப் பூவிற் பிறந்த பாவை நல்லாள் வாழியே

பங்குனியில் உத்தர நாள் பாருதித்தாள் வாழியே 

மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே 

மால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே 

எங்கள்  எழில் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே 

இருபத் தஞ்சுட்பொருள் மால் இயம்புமவள் வாழியே 

செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே 

சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே 



ஒன்பதாம் திருநாள் காலை - நம்பெருமாள்  சேர்த்தி மண்டபம் புறப்பாடு





ஒன்பதாம் திருநாள் பகல் - ஶ்ரீரங்கநாயகி தாயார்
சேர்த்தி மண்டபம் புறப்பாடு






ஐஸ்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வா
கஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்ய
அஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்ப
த்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதார பாவ: 58


 ( அஞ்சிறப் பக்கர மாக்கமோ அம்மனாய்
அஞ்சலி சுமப்பவர்க்கு அருளியு மேற்ப யான்
எஞ்சற ஈகலன் எனத் தலை குனிதியேல்
கொஞ்சமோ குருதி அம்மா நின் கொடைத் திறன் -58- )

பராசர பட்டர் அருளிய ஸ்ரீ குணரத்ன கோசம் –ஸ்லோகம் —58 —


ஸ்ரீரங்கநாயகி தாயார் பகவானுடன் ஏக சிம்மாசனத்தில் வெட்கப்பட்டு கொண்டு அருகில் அமர்ந்திருப்பதை கண்ட பராசரபட்டர் இவ்வாறு சாதிக்கிறார்...

தாயே! ஸ்ரீரங்கநாயகி! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்!

 என்ன காரணம்? 

அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்று எண்ணுகிறாய்.

இதனால் அவனுக்கு (ஜஸ்வர்யம் அக்ஷர கதிம்:)
அக்ஷர: என்றால் “அழிவற்றது” என்று பொருள். 
இந்த பெளதிக உலகில் ஒரு பொருள் தோன்றுகிறது, வளர்ச்சி அடைகிறது, 
சில காலம் தங்குகிறது, சில பொருட்களை உற்பத்தி செய்கிறது, நலிவடைகிறது, இறுதியில் மறைந்து போகிறது. 

இவையே ஜடப் பொருட்களில் ஏற்படும் ஆறு வகையான மாற்றங்கள்.

தங்களை கரங்களை உயர்த்தி வணங்கியதற்கே தாயாரான நீங்கள் நித்தியமான அழிவற்றதான செல்வத்தையும்,
தங்களுக்கு கைங்கர்யம் செய்யும் பாக்யத்தையும், இது போதாது என்று
புருஷகாரத்தால் பகவானிடமிருந்து உயர்ந்த மோக்ஷத்தையும் பெற்றுத்தருகிறாய்.

இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? 

“ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ?

நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? 

இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே!

நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி,
நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக்கிறாய்.

இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக. ...என்று பட்டர் சாதிக்கிறார்



ஸ்ரீ நம்பெருமாள்  - ஶ்ரீரங்கநாயகி தாயார்
சேர்த்தி சேவை 





















பெருமாள் திருமொழி 

3. மெய் இல் வாழ்க்கை 

அழகிய மணவாளன் பால் பித்தன் எனல் 


675

பேயரே*  எனக்கு யாவரும்*  யானும் ஓர்

பேயனே*  எவர்க்கும் இது பேசி என்*

ஆயனே!*  அரங்கா என்று அழைக்கின்றேன்*

பேயனாய் ஒழிந்தேன்*  எம்பிரானுக்கே 8



676

அங்கை-ஆழி*  அரங்கன் அடியிணை*

தங்கு சிந்தைத்*  தனிப் பெரும் பித்தனாய்க்*

கொங்கர்கோன்*  குலசேகரன் சொன்ன சொல்*

இங்கு வல்லவர்க்கு*  ஏதம் ஒன்று இல்லையே (2)


 ஸ்ரீ நம்பெருமாள் ஶ்ரீ ரங்கநாயகித் தாயார்
  திருவடிகளே சரணம் !!



அன்புடன்
அனுபிரேம்💖💖💖

4 comments:

  1. படங்களும் விவரங்களும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்

      Delete
  2. How to contact you Bro

    ReplyDelete