![]()  | 
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராம என்று இரண்டு எழுத்தினால்"
“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”
பெரிய திருமொழி
10 -3. ஏத்துகின்றோம் 
இராமாவதார ஈடுபாடு 
ஏத்துகின்றோம் நாத் தழும்ப*  இராமன் திருநாமம்* 
சோத்தம், நம்பீ! சுக்கிரீவா!* உம்மைத் தொழுகின்றோம்*
வார்த்தை பேசீர், எம்மை* உங்கள் வானரம் கொல்லாமே*
கூத்தர் போல ஆடுகின்றோம்* குழமணி தூரமே (2) 1
1868  
எம்பிரானே! என்னை ஆள்வாய்*  என்று என்று அலற்றாதே* 
அம்பின் வாய்ப்பட்டு, ஆற்றகில்லாது*  இந்திரசித்து அழிந்தான்*
நம்பி அநுமா! சுக்கிரீவா!*  அங்கதனே! நளனே* 
கும்பகர்ணன் பட்டுப்போனான்*  குழமணி தூரமே  2
1869
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
அன்புடன் 
அனுபிரேம் 💖💖











No comments:
Post a Comment