"பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்"
- ராமர் புஜங்காஷ்டகம்.
பொருள்: அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.
 பெரிய திருமொழி
10 -3. ஏத்துகின்றோம் 
இராமாவதார ஈடுபாடு 
வென்றி தந்தோம்; மானம் வேண்டோம்*  தானம் எமக்காக*
இன்று தம்மின் எங்கள் வாழ் நாள்*  எம் பெருமான் தமர்காள்*
நின்று காணீர் கண்கள் ஆர*  நீர் எம்மைக் கொல்லாதே*
குன்று போல ஆடுகின்றோம்*  குழமணி தூரமே       5
1872
கல்லின் முந்நீர் மாற்றி வந்து*  காவல் கடந்து,*  இலங்கை-
அல்லல் செய்தான் உங்கள் கோமான்*  எம்மை அமர்க்களத்து*
வெல்லகில்லாது அஞ்சினோம் காண்*  வெம் கதிரோன் சிறுவா,* 
கொல்ல வேண்டா; ஆடுகின்றோம்*  குழமணி தூரமே  6
1873
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !
அன்புடன் 
அனுபிரேம் 💖💖










No comments:
Post a Comment