13 August 2026

5. ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் வாகனத்தில்..

🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்



3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

4. ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு ..













நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 

ஐந்தாம் பாசுரம்  ---  நீ என்ன செய்தாலும் நாங்கள் கோபப்படாமல் இருப்பது உன் கண்களுக்குத் தெரியவில்லையா என்கிறார்கள்.


518

வெள்ளை நுண் மணல் கொண்டு சிற்றில்

 விசித்திரப் பட வீதி வாய்த்

தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் 

அழித்தியாகிலும் உன்தன் மேல்

உள்ளம் ஓடி உருகல் அல்லால்

 உரோடம் ஒன்றும் இலோம், கண்டாய்

கள்ள மாதவா! கேசவா! உன் 

முகத்தன கண்கள் அல்லவே


கபடச் செயல்களையுடைய மாதவா! கேசவா! 

வெளுத்துச் சிறுத்திருக்கும் மணல்களைக் கொண்டு நாங்கள் தெருவிலே எல்லோரும் ஆச்சர்யப்படும்படி தெளித்து இழைத்த அழகிய சிற்றில்களை நீ அழித்தாயாகிலும், எங்கள் நெஞ்சு உடைந்து உருகுமே தவிர, உன் மேல் சிறிதும் கோபப்படமாட்டோம். 

உன் திருமுகத்தில் இருப்பது கண்கள்தானே? அவற்றைக் கொண்டு நீயே பார்க்கலாமே.


ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗


No comments:

Post a Comment