🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸
1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
முதலாம் நாள் இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்.
3.மூன்றாம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் புறப்பாடு.
4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.
ஶ்ரீவில்லிபுத்தூர் - ஐந்து கருட சேவை
6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு .
ஆடிப்பூரம் ஏழாம் திருநாள் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள்ரெங்கமன்னார்.
விண்ணுலகிலுள்ள பரமபதத்திலும் காணக் கிடைக்காத ஸ்ரீஆண்டாள் நாச்சியார் மடியில் ஸ்ரீரங்கமன்னார் சயனத் திருக்கோலம் விண்ணுலகத்தவரும் வியந்து சேவிக்கும் அற்புதமான சேவை.
ஆண்டாள் மடியில் அரங்கர் சயனக்கோலம்
ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று (12/08/26) காலை இரட்டைத்
தோளுக்கினியானில்,புறப்படும் ஆண்டாள்,ரங்க மன்னார் முதலில்,
ஸ்ரீமணவாள மாமுனிகள் ஜீயர் மடத்துக்கு எழுந்தருளினார்கள்.
பின்னர் சோமானி பவன், ஸ்ரீ ஆண்டாள் எட்டெழுத்துப் பெருமாள் ராமாநுஜ கூடம் (மஞ்சப்புதுத் தெரு) ஆகிய மண்டபங்களில் எழுந்தருளி மாலை கிருஷ்ணன் கோவில் சென்றார்கள்.(ரயில்நிலையம் செல்லும் வழியில்;கிருஷ்ண தேவராயர் திருப்பணி செய்த கோவில்).
அங்கு திவ்ய தம்பதிகளுக்குத் திருமஞ்சனம் நடைபெறும்.
இரவு 7 மணி யளவில், "ஆண்டாள் மடியில் அரங்கர் சயனக்கோலம்" சேவை.
வைபவத்தில்,குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியை,
அத்யாபகர்கள் அற்புதமாகச் சேவிப்பார்கள்.
"மன்னுபுகழ்க் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவளே" என்று தொடங்கும் எட்டாம் பத்தில் ஒவ்வொரு பாசுரத்தின் ஈற்றடிகளில் "இராகவனே தாலேலோ"என்று பாடுவது மிக அருமையாக இருக்கும்.
சிறப்பு நாதஸ்வர,தவில் மங்கள இசையும் அற்புதமாக இருக்கும்.
அரங்கரைக் கட்டிப்போடும் ஆண்டாள்:
ஆண்டாள் அரங்கரை அடையவேண்டும், என்று நெக்குருகப் பாடினார்.
அரங்கரை அடைந்தது மட்டுமல்லாமல்,அவரைத் தம் பக்திக் கயிற்றால் கட்டிப்போட்டு, தம் மடியில் ஆனந்தத் துயில் கொள்ளவைத்து விட்டார்.
ஆண்டாள் திருமுகத்தில் பீறிடும் பெருமை/காம்பீர்யம் பாருங்கள்.ரங்கமன்னார் முகத்தில் ஆழ்கடல் அமைதி/சாந்தம்,நிம்மதி நிலவும் அழகு.
ஆண்டாள் முந்தானை,பெருமாள் திருவடி வரை நீண்டிருப்பது அழகு!
ஆண்டாளின் நீல வண்ணமும்
ரங்கமன்னாரின் காயாம்பூ வண்ணமும் !
ஆண்டாள் அருமையான நீலநிறப் பட்டு வஸ்த்ரம் உடுத்தியிருக்கிறார்
பொதுவாக, நீல நிறம் அமைதியையும், சாந்தத்தையும் குறிக்கும்.
பூமித்தாயான ஆண்டாள்,வானத்தையும்,கடலையும் சூடியிருப்பது போல நீல நிறப் பட்டுடுத்தி பக்தர்களைக் குளிரக் கடாட்சிக்கிறார்.
ஆண்டாள் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்றோ?
ஆண்டாளின் நீல நிறத்துக்குப் பொருத்தமாக ஸ்ரீ ரங்கமன்னார் காயாம்பூ நீலப் பட்டில் !
"கருவிளை ஒண்மலர்காள்,
காயா மலர்கள்,
திருமால் உருவொளி காட்டுகின்றீர்"
என்று கண்ணனின் காயாம்பூ நிறத்தைப் பாடி வைத்துள்ளாரே ஆண்டாள் !
திருவடி ரேகைகள்:
ரங்கமன்னார் திருவடிகளில் சங்கு,சக்கரப் பொறி ரேகைகளைச் சேவித்து மகிழுங்கள். ஆண்டாளின் செளரி/குஞ்சம் அழகும், ரங்கமன்னாரின் நீண்ட முடியழகும் நெஞ்சை அள்ளும்.
இரவு 1 மணியளவில் கண்ணாடி சப்பரத்தில் ஆண்டாளும்,
அரங்கரும் ஆஸ்தானம் புறப்படுவார்கள்.
(நன்றி சுவாமி ---- அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜதாசன்)
நாச்சியார் திருமொழி
2. நாமமாயிரம்
சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல்
ஆறாம் பாசுரம் -- சிற்றில் அழிப்பது என்று நீ வேறொன்றை நினைக்கிறாய். அது எங்களுக்குப் புரியவில்லை என்கிறார்கள்.
519
முற்று இலாத பிள்ளைகளோம் முலை
போந்திலாதோமை நாள் தொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிது
உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து
அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய
சேவகா! எம்மை வாதியேல் 6
519
கடலில் அணைகட்டி ராக்ஷஸருடைய குலங்களை முழுவதும் அழித்து இலங்கையை யுத்தபூமியாக்கிய வீரனே! சிறு பிள்ளைகளாய், முலைகளும் கிளரப்பெறாத எங்களை தினமும் சிற்றில் அழிப்பதை ஒரு காரணமாகக் கொண்டு நீ செய்யும் செயல்களுக்கு உட்கருத்து ஒன்று உண்டு. அந்தக் கருத்தை நாங்கள் கற்று அறியவில்லை. எங்களை நீ துன்புறுத்தாதே.
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment