08 August 2026

3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

    ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

3. மூன்றாம் திருநாள் 

மூலவர்     - அரங்கன்

உற்சவர்  - ஆண்டாள்  திருக்கோலத்தில் 












நாச்சியார் திருமொழி

பன்னிரண்டாம் திருமொழி – 

12. மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல் 



மூன்றாம் பாசுரம். கண்ணனை ஒழுங்காக வளர்க்காததற்கு யசோதைப் பிராட்டியைச் சொல்லிக் குற்றமில்லை. தகப்பனாய் கண்ணனை அடக்கி வைத்திருக்கவேண்டிய ஸ்ரீநந்தகோபன் திருமாளிகை வாசலிலே என்னைக் கொண்டு போய்ப் போடுங்கள் என்கிறாள்.

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
 தனி வழி போயினாள் என்னும் சொல்லு
வந்த பின்னைப் பழி காப்பரிது
மாயவன் வந்து உருக்காட்டுகின்றான்,
கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக் 
குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத்தலைக்கே
 நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்  

619

12.3

“தகப்பனும் தாயும் உறவினர்களும் இருக்கும்போது தான் தோன்றியாகத் தெருவிலே புறப்பட்டாள்” என்கிற வார்த்தையானது உலகில் பரவின பிறகு அப்பழியைத் தடுக்கமுடியாது. நான் அப்படித் தனியாகப் போகாமலும் இருக்க முடியவில்லை. ஏனெனில், ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய கண்ணன் எதிரே வந்து தன் வடிவைக்காட்டி என்னை இழுக்கின்றான். பெண்களிடம் சண்டைசெய்து பழி விளைத்து, குறும்பு செய்யும் பிள்ளையைப் பெற்றவனான ஸ்ரீநந்தகோபருடைய திருமாளிகை வாசலிலே நடுநிசியிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment