15 August 2026

7.ஶ்ரீபார்த்தசாரதி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

     ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

6.பரமஸ்வாமி திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

7.ஏழாம் திருநாள் 

மூலவர்  -  ஶ்ரீபார்த்தசாரதி

உற்சவர் -  கஜேந்திர வரதன் திருக்கோலத்தில் 












நாச்சியார் திருமொழி

பன்னிரண்டாம் திருமொழி – 

12. மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல் 



ஏழாம் பாசுரம். உன்னுடைய இந்தத் துன்பம் எப்போது தீரும் என்று கேட்க அவனுடைய திருத்துழாய் மாலையைச் சூட்டினால் மட்டுமே போகுமாகையாலே அவன் வெற்றிமாலை சூட்டி இருக்கும் இடத்தில் என்னைக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.


வண்ணம் திரிவும் மனங்குழைவும் 
மானம் இலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணல் உறாமையும் உள் மெலிவும் 
ஓதநீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந்துழாய் என்னும் மாலை கொண்டு 
சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண்ணழியப் பலதேவன் வென்ற 
பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின் 7

623

என்னுடைய மேனி நிறத்தின் மாறுபாடும் மனத்தளர்ச்சியும் மானமில்லாத நிலையும் வாய் வெளுத்திருக்கும் நிலையும் உணவு வேண்டியிராமையும் அறிவு சுருங்கிப்போயிருப்பதுமான இவை எல்லாம் எப்போது தணியும் என்றால் கடல்வண்ணன் என்று ப்ரஸித்தனான ஒப்பற்றவனான கண்ணனுடைய குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையைச் சூட்டுமளவில் நீங்கும். அதை உங்களால் இங்கே கொண்டு வர முடியாததால், நம்பிமூத்தபிரானான பலராமன் ப்ரலம்பாஸுரனை எலும்பு முறியும்படி  கொன்று முடித்த இடமாகிய பாண்டீரம் என்னும் ஆலமரத்தினருகில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment