ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்
2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
6.பரமஸ்வாமி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
7.ஶ்ரீபார்த்தசாரதி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
8. ஆராவமுதன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
9. செல்வநாராயணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
10.ஸ்ரீரங்கம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி –
12. மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
பத்தாம் பாசுரம். தான் தன்னை எம்பெருமானின் இருப்பிடங்களில் சென்று சேர்க்கும்படி ப்ரார்த்தித்த இத்திருமொழியை அனுஸந்திப்பவர்கள் அர்ச்சிராதி கதியில் சென்று ஸ்ரீவைகுண்டத்தை அடைவார்கள் என்று பல சொல்லி முடிக்கிறாள்.
மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவராபதி தன்னளவும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித்
தாழ்குழலாள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே 10
626
தொங்கும் கூந்தலை உடையவளாய், பொன்மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாள் (நான்), ஸ்ரீமதுரை முதல் ஸ்ரீத்வாரகை வரை சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில் ஆண்டாளாகிற தன்னைச் சேர்க்கவேண்டித் தன் உறவினர்களிடம் கொண்ட உறுதி விஷயமாக இனிய இசையுடன் அருளிச்செய்த அழகிய சொல் மாலையாகிய இத்திருமொழியை ஓதவல்லவர்களுக்கு வாழுமிடம் பரமபதமேயாம்.
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்.......
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment