12 August 2026

6.பரமஸ்வாமி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

     ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம் 

 ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  ஆடிப்பூர உற்சவம் 

1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் 

2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 

5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ  ஆண்டாள் நாச்சியார் 


6.ஆறாம் திருநாள் 

மூலவர் - பரமஸ்வாமி (திருமாலிருஞ்சோலை)

உற்சவர் அழகர் -திருக்கோலத்தில் 














நாச்சியார் திருமொழி

பன்னிரண்டாம் திருமொழி – 

12. மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல் 


ஆறாம் பாசுரம். கண்ணன் ரிஷிபத்னிகளிடத்தில் உணவு உண்ட இடத்திலே என்னைக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.

கார்த்தண் முகிலும் கருவிளையும்
 காயா மலரும் கமலப் பூவும்
ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு
 இருடீகேசன் பக்கல் போகே என்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து 
வேண்டடிசில் உண்ணும் போது ஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்
 பத்தவிலோசனத்து உய்த்திடுமின்  12.6


622

மழைக்காலத்திலுண்டான குளிர்ந்த மேகமும் கருவிளைப்பூவும் காயாம்பூவும் தாமரைப்பூவுமாகிற இவைகள் எதிரே வந்து நின்று “நீயும் ஹ்ருஷீகேசனிடத்தில் போ” என்று என்னை நிர்ப்பந்தம் செய்கின்றன. அதனால், கண்ணன் பசு மேய்ப்பதால் வேர்வைபொங்கி, பசியினால் வருந்தி, வயிறு தளர்ந்து “வேண்டிய அளவுக்கு ப்ரஸாதம் உண்ணும் காலம் இது” என்று ரிஷி பத்னிகளின் வரவை எதிர்பார்த்திருந்து நெடுங்காலம் கடாக்ஷித்துக்கொண்டிருக்குமிடமான பக்தவிலோசனம் என்ற ஸ்தானத்திலே என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment