16 August 2026

9. திருபூரம் சாற்றுமுறையில் ஶ்ரீ ஆண்டாள்

 🌸 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூரம் பிரம்மோற்சவம் 🌸

 1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்

 முதலாம் நாள்  இரவு பதினாறு வண்டிச் சப்பரத்தில்  ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்



3.மூன்றாம்  திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் தங்க நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும்  புறப்பாடு.

4. நான்காம் திருநாள் இரவு - ஸ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ஸ்ரீ ரங்கமன்னார் கோவர்தனகிரி வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

 ஶ்ரீவில்லிபுத்தூர் -  ஐந்து கருட சேவை 

 6ஆம் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ ஆண்டாள் கனக தண்டியல் மற்றும் ஸ்ரீ ரங்கமன்னார் யானை வாகனத்தில் திருவீதி உலா புறப்பாடு .

ஆடிப்பூரம் ஏழாம் திருநாள்  ஸ்ரீ ஆண்டாள் தாயார் திருமடியில் ஸ்ரீ ரெங்கமன்னார் சயனத் திருக்கோலம்.

எட்டாம் திருநாள் இரவு ஸ்ரீ ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ஸ்ரீரங்கமன்னார் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி, திருவீதி புறப்பாடு.

ஒன்பதாம் நாள் - ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஶ்ரீ ரெங்கமன்னார் ஆடிப்பூர திருத்தேர் ...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஒன்பதாம் நாள் இரவு திரு ஆடிப்பூர நந்தவனத்தில், ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த புனித இடத்தில் வைத்து விசேஷ ஆராதனையும், வேத பிரம்ம கோஷமும் ...












நாச்சியார் திருமொழி

2. நாமமாயிரம் 

சிற்றில் சிதைக்க வேண்டாம் என வேண்டுதல் 

ஒன்பதாம் பாசுரம் --- கண்ணனோடு கூடியதைச் சொல்லி அனுபவிக்கிறார்கள்.


முற்றத்து ஊடு புகுந்து நின் முகம் 

காட்டிப் புன்முறுவல் செய்து

சிற்றிலோடு எங்கள் சிந்தையும்

 சிதைக்கக் கடவையோ? கோவிந்தா!

முற்ற மண்ணிடம் தாவி விண் உற

 நீண்டு அளந்து கொண்டாய்! எம்மைப்

பற்றி மெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப்

 பக்கம் நின்றவர் என் சொல்லார்?  9


கோவிந்தா! ஒரு திருவடியினால் பூலோகம் முழுதும் தாவி அளந்து, மற்றொரு திருவடியை ஆகாசத்தளவும் நீட்டி மேலுலகங்களையும் அளந்து கொண்டவனே! 

 நாங்கள் விளையாடுகிற முற்றத்திலே வந்து புகுந்து, உனது திருமுகத்தைக் காட்டி, புன்முறுவல் செய்து, எங்கள் சிற்றிலையும் நெஞ்சையும் அழிப்பாயோ? 

அதற்கு மேலே எங்களைப் பற்றி அணைத்துக் கொண்டாய் என்றால் அருகில் இருப்பவர்கள் என்ன வார்த்தை சொல்லுவார்கள்?



ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்  திருவடிகளே சரணம்.......



தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗



No comments:

Post a Comment