ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்
2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
4. நான்காம் திருநாள் -
மூலவர் - திருவேங்கடமுடையான்
உற்சவர் பூவராகன் திருக்கோலத்தில்
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி –
12. மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
நான்காம் பாசுரம். எம்பெருமானுக்கே முழுவதுமாக அடிமைப்பட்டவளான என்னை யமுனை நதிக்கரையில் கொண்டுவிடுங்கள் என்கிறாள்.
அங்கைத் தலத்திடை ஆழி கொண்டான்
அவன் முகத்தன்றி விழியேன் என்று
செங்கச்சுக் கொண்டு கண்ணாடை ஆர்த்துச்
சிறுமானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர்
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய்
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்
620
12.4
தாய்மார்களே! அழகிய கைத்தலத்திலே திருவாழியை ஏந்தியிருப்பவனான கண்ணனுடைய முகத்தில் தவிர வேறொருவருடைய முகத்தில் விழிக்கமாட்டேனென்று நல்ல சிவந்த வஸ்த்ரத்தாலே முலைக்கண்களை மூடிக்கொண்டு தாழ்ந்தவர்களைக் கண்டால் வெட்கப்படும் இம்முலைகளை நீங்கள் உற்றுப்பாருங்கள். இவை கோவிந்தனைத் தவிர மற்றொருவர் வீட்டு வாசலைப் பார்க்காது. ஆகையால், நான் இவ்விடத்தில் வாழ்வதைவிட்டு, என்னை யமுனை நதிக்கரையிலே சென்று சேர்த்துவிடுங்கள்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment