ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர உற்சவம்
ஸ்ரீரங்கம் பரமபத நாதர் சந்நிதியில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் ஆடிப்பூர உற்சவம்
1. ஒன்றாம் திருநாள் - கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள்
2. இரண்டாம் திருநாள் - கேசி வதம் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
3. அரங்கன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
4. திருவேங்கடமுடையான் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
5. துவராபதி கண்ணன் திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
6.பரமஸ்வாமி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
7.ஶ்ரீபார்த்தசாரதி திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்
8. எட்டாம் திருநாள்
மூலவர் - ஆராவமுதன்
உற்சவர் - குறும்பு செய்வானோர்மகன் திருக்கோலத்தில்
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி –
12. மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
எட்டாம் பாசுரம். அவன் பசுக்களை ரக்ஷித்த கோவர்த்தனத்துக்கு அருகில் என்னைக் கொண்டு சேருங்கள் என்கிறாள்.
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை யாப்பும் உண்டான்,
பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக் கொலோ?
கற்றன பேசி வசவு உணாதே
காலிகள் உய்ய மழை தடுத்து
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற
கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் 8
624
கண்ணன் கன்றுகளின் கூட்டங்களை மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றான். வீட்டை விட்டுச் சென்று காட்டிலேயே தங்கி வாழும்படியான இடைச்சாதியிலும் பிறக்கப் பெற்றான். வெண்ணெய் களவில் பிடிபட்டு உரலிலே கட்டுப்படவும் பெற்றான். இப்படி எம்பெருமானின் குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே! உங்களுக்கு இவை என்னிடம் வசவு வாங்கக் காரணமாயிற்றே! நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி என்னிடத்தில் வசவு கேட்டுக் கொள்ளாமால் பசுக்கள் பிழைக்கும்படிக் கல்மழையைத் தடுத்து வெற்றிக்குடையாக எம்பெருமானால் தரிக்கப்பட்ட கோவர்த்தன மலையினருகில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment