14 September 2026

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்....

                              அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...







வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.



பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது 
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், 
பெருமலரை உடைய லக்ஷ்மியின் கடாக்ஷமும், நோயற்ற வாழ்வும் 
கிடைக்கும்.








பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் இவை 
நாலும்கலந்து உனக்கு நான் தருவேன் -கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

-ஒளவையார்



விநாயகர் திருவடிகளே சரணம் ...



அன்புடன் ,
அனுபிரேம்

No comments:

Post a Comment