26 January 2023

நமது குடியரசு தினம் ....

 

  இந்தியர்களாகிய நாம் இன்று  74ஆவது  குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம்........!










குடியரசு தினம் என்பது ...

இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. முன்னதாக இந்தியாவுக்கான அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 2 ஆண்டு, 11 மாதம் 18 நாட்களில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு 1950 ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளையே ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடுகின்றோம்.



பண்டரிபுரத்தில் 







குடியரசு தினம் கொண்டாடப்படும் விதம் 

குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி இந்தியாவின் படைபலத்தை உலகுக்கு தெரிவிக்கும் வகையில் ராணுவ அணி வகுப்பு டெல்லி ராஜ்பாத்தில் நடைபெறும். 

இதற்கு முன்னதாக குடியரசு தலைவர் டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றுவார். 

முப்படை அணிவகுப்புடன், இந்தியாவின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெறும். 

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலாசார வாகன ஊர்திகள் இடம்பெறும். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அணிவகுப்பு அமையும். 

மாநிலங்களில் அந்தந்த மாநில கவர்னர்கள் கொடியேற்றுவார்கள். மாநில அரசுகள் சார்பாக பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும், சிறந்த முறையில் பணியாற்றிவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் இந்த தினத்தின்போது வழங்கப்படுகிறது. 

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவார்கள். இவர்கள் பெரும்பாலும் உலக நாடுகளின் பிரதமர் அல்லது அதிபராக இருப்பார்கள். இந்த முறை எகிப்து நாட்டின் அதிபர் அல் சிசி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.



இந்த ஆண்டு அணிவகுப்பிலிருந்து சில படங்கள் ..... 

கர்நாடகா 







கேரளா 









தமிழ்நாடு 





போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்

(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)


வலிமையற்ற தோளினாய் போ போ போ

மார்பி லேஒடுங்கினாய் போ போ போ

பொலிவி லாமுகத்தினாய் போ போ போ

பொறி யிழந்த விழியினாய் போ போ போ

ஔங்யி ழந்த குரலினாய் போ போ போ

ஒளியி ழந்த மேனியாய் போ போ போ

கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ

கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ


இன்று பார தத்திடை நாய்போல

ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ

நன்று கூறில் அஞ்சுவாய் போ போ போ

நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ

சென்று போன பொய்யெலாம் மெய்யாகச்

சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ

வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக

விழிம யங்கி நோக்குவாய் போ போ போ


வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ

வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ

நூறு நூல்கள் போற்றுவாய் மெய்கூறும்

நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ

மாறு பட்ட வாதமே ஐந்நூறு

வாயில் நீள ஓதுவாய் போ போ போ

சேறுபட்ட நாற்றமும் தூறுஞ்சேர்

சிறிய வீடு கட்டுவாய் போ போ போ


ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ

தரும மொன்றி யற்றிலாய் போ போ போ

நீதி நூறு சொல்லுவாய் காசொன்று

நீட்டினால் வணங்குவாய் போ போ போ

தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே

தீமை நிற்கி லோடுவாய் போ போ போ

சோதி மிக்க மணியிலே காலத்தால்

சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ.


(வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்)


ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

களிப டைத்த மொழியினாய் வா வா வா

கடுமை கொண்ட தோளினாய் வா வா வா

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா

சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா

ஏறு போல் நடையினாய் வா வா வா


மெய்ம்மை கொண்ட நூலையே அன்போடு

வேதமென்று போற்றுவாய் வா வா வா

பொய்ம்மை கூற லஞ்சுவாய் வா வா வா

பொய்ம்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா

நொய்ம்மை யற்ற சிந்தையாய் வா வா வா

நோய்க ளற்ற உடலினாய் வா வா வா

தெய்வ சாபம் நீங்கவே நங்கள் சீர்த்

தேசமீது தோன்றுவாய் வா வா வா


இளைய பார தத்தினாய் வா வா வா

எதிரிலா வலத்தினாய் வா வா வா

ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்

உதய ஞாயி றொப்பவே வா வா வா

களையி ழந்த நாட்டிலே முன்போலே

கலைசி றக்க வந்தனை வா வா வா

விளையு மாண்பு யாவையும் பார்த்த ன்போல்

விழியி னால் விளக்குவாய் வா வா வா


வெற்றி கொண்ட கையினாய் வா வா வா

விநயம் நின்ற நாவினாய் வா வா வா

முற்றி நின்ற வடிவினாய் வா வா வா

முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா

கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா

கருதிய தியற் றுவாய் வா வா வா

ஒற்றுமைக்கு ளுய்யவே நாடெல்லாம்

ஒரு பெருஞ் செயல் செய்வாய் வா வா வா




குடியரசு தினம் பற்றிய தகவல்கள் உள்ள  முந்தைய பதிவுகள் ....

குடியரசு தினம் (2022)



வாழ்க பாரதம்!!!! 
ஜெய் ஹிந்த்!!!


 அன்புடன்
அனுபிரேம் 💖💖💖





1 comment:

  1. குடியரசு தின வாழ்த்துகள்!
    பாரதி பாடல்கள் பகிர்வு அருமை.

    ReplyDelete