26 January 2022

குடியரசு தினம் ....

  இந்தியர்களாகிய நாம் இன்று எழுபத்தி மூன்றாவது    குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம்........!




இந்த ஆண்டின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ...


மத்திய பாதுகாப்பு அமைச்சகம்தான் குடியரசு தின அணிவகுப்பைப் பொறுப்பேற்று நடத்துகிறது. அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்வதும் இந்த அமைச்சகத்தின் பணிதான். மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவையே அலங்கார ஊர்திகளை அனுப்பிவைக்கும் உரிமையுள்ளவை. அலங்கார ஊர்திகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது, சூழலுக்கு உகந்த இயற்கையான மூலப்பொருட்களையே பயன்படுத்த வேண்டும். புகழ்பெற்ற நிறுவனங்கள், தகுதிவாய்ந்த வடிவமைப்பாளர்களை வைத்தே இதை உருவாக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள் உண்டு.





ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒரு பொதுவான 'தலைப்பு ' வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அலங்கார ஊர்திகளை வடிவமைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொள்ளும். இந்த ஆண்டு 75வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஒட்டி, சுதந்திரப் போராட்டம், இந்தியாவின் சாதனைகள், சுதந்திர இந்தியா ஏற்றுக்கொண்ட உறுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அலங்கார ஊர்தி மாதிரியை அனுப்புமாறு கேட்டிருந்தனர்.







2021 செப்டம்பர் 16-ம் தேதி இந்த ஆண்டுக்கான அணிவகுப்பு குறித்து முதல் கடிதம் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. செப்டம்பர் 27-ம் தேதிக்குள் மாநிலங்கள் தங்கள் மாதிரிகளை சமர்ப்பித்தன. கட்டடம் கட்டுவதற்கு அங்கீகாரம் வாங்க சமர்ப்பிக்கும் மாதரி  போல, அலங்கார ஊர்தியின் ஒரு வரைப்படம்  முதலில் அனுப்பி வைக்க வேண்டும்.

அக்டோபர் இரண்டாம் வாரத்தில் நிபுணர் குழு இந்த வரைபடங்களைப் பார்வையிட்டது. மொத்தம் 56 மாதிரிகள்  வந்திருந்தன. அவற்றில் செய்ய வேண்டிய திருத்தங்களைக் குறிப்பிட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன.




இப்படி முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வான மாதிரி வடிவத்தை, ஒரு மினியேச்சர் வடிவத்தில் செய்து அடுத்ததாக அனுப்ப வேண்டும். நிபுணர் குழு சொல்லியிருக்கும் திருத்தங்களையும் அதில் செய்திருக்க வேண்டும். அதை திரும்பவும் அந்தக் குழு பார்வையிட்டு முடிவு செய்யும். வெளிநாட்டுத் தலைவர்களையும் கவரும் விதத்தில் அது இருக்குமா, பார்வையாளர்களிடம் வரவேற்பு பெறுமா, கலைநயத்துடன் இருக்கிறதா என்று பல்வேறு அம்சங்களை அந்தக் குழு பரிசீலனை செய்யும். தேவைப்படும் திருத்தங்களையும் சொல்லும்.

இந்த ஆண்டு வந்த 56 பரிந்துரைகளில் வெறும் 21 மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. இவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் 12. மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறைகளின் ஊர்திகள் ஒன்பது.






"எல்லா பரிந்துரைகளையும் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு கட்டப் பரிசீலனையிலும் சில ஊர்திகள் நிராகரிக்கப்படும். அதற்கு முறையான காரணங்கள் இருக்கும். திருத்தங்களைச் செய்து பல கட்டங்களைத் தாண்டி விட்டதாலேயே ஓர் ஊர்தி கண்டிப்பாக அணிவகுப்பில் இடம்பெறும் என்று சொல்லிவிட முடியாது. கடைசிக்கட்டம் வரை தேர்வாகியுள்ள இந்த 21 ஊர்திகளில் கூட, எல்லாமே அணிவகுப்பில் வரும் என்று உறுதி கிடையாது. இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட மாதிரியைப் போல அது இல்லையென்றால், கடைசி நிமிடத்தில்கூட நிராகரிக்கப்படலாம். இதில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது. பாதுகாப்பு அமைச்சகமோ, மத்திய அரசோ, பிரதமரோ இதில் தலையிடுவதே இல்லை" என்பது பாதுகாப்பு அமைச்சகம் சொல்லும் விளக்கம்.

(இணையத்திலிருந்து )








குடியரசு தினம் பற்றிய தகவல்கள் உள்ள  முந்தைய பதிவுகள் ....

குடியரசு தினம் (21)....

நமது குடியரசு தினம்(20).................

நமது குடியரசு தினம் (19).................

நமது குடியரசு தினம் (18).................





பல கடின நேரங்களை அன்பு என்னும் கயிறு  கொண்டு கடந்து வந்தோம் ....
என்றும் இந்த அன்பு கயிறு அனைவரையும் இணைக்கட்டும் ....

வாழ்க பாரதம்!!!! 

ஜெய் ஹிந்த்!!!


 அன்புடன்

அனுபிரேம்

4 comments:

  1. படங்கள் மிகவும் தெளிவாக சகோ. இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தகவல்களும் படங்களும் மிக அருமை அனு

    கீதா

    ReplyDelete
  3. இப்படியான தகவல்களை இப்போதுதான் அறிகிறேன். நன்றி படங்களும் நன்றாகத் தெளிவாக இருக்கின்றன

    குடியரசு தின வாழ்த்துகள்

    துளசிதரன்

    ReplyDelete
  4. அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete