12 January 2022

இருபத்தெட்டாம் பாசுரம் - கறவைகள் பின் சென்று

 இருபத்தெட்டாம் பாசுரம் -  இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள்.







கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

     அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்

     குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது

     அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்

சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே

     இறைவா!  நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்


ஒருவிதமான தோஷமும் இல்லாத கோவிந்தா! 

நாங்கள் பசுக்களின் பின்னே சென்று காட்டை அடைந்து உண்டு திரிவோம். 

சிறிதும் ஞானம் இல்லாத இடையர் குலத்தில் நீ வந்து பிறக்கும்படியான புண்ணியத்தை உடையவர்களாய் இருக்கிறோம்.

 இறைவா! உன்னோடு எங்களுக்கு இருக்கும் உறவானது உன்னாலும் எங்காளாலும் ஒழிக்கமுடியாதது.

ஒன்றும் அறியாத சிறுபெண்களான நாங்கள் உன் மீதுள்ள அன்பினாலே உன்னைச் சிறு பெயரைச் சொல்லி அழைத்ததைக் குறித்து எங்களிடத்தில் கோபிக்காமல், நாங்கள் விரும்பும் பலனைக் கொடுத்தருள வேண்டும்.


நன்றி - Upasana Govindarajan Art


 

ஸ்ரீ கோதை நாச்சியார் - குளித்தலை ஸ்ரீ நீலமேகப்பெருமாள் ஸன்னதி 

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. அருமை...

    நேற்று அக்காரைவடிசல் செஞ்சு இன்று தயிர்சாதம் செய்து சாப்டாச்சு!!! நம்ம கூடாரை கறவை எல்லாம் இம்புட்டுத்தான் ஹாஹாஹாஹா

    கீதா

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. அழகான திருப்பாவை பாடலை பாடிக்கொண்டே குளித்தலை ஸ்ரீ கோதை நாச்சியாரை பக்தியுடன் தரிசித்து கொண்டேன். பாடலின் விளக்கம் நன்று. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. மார்கழி மாதத்தில் பாசுரங்களும் அதற்கான விளக்கங்களும் பொருத்தமான படங்களும் என சிறப்பாக பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete