இருபத்துமூன்றாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமான் ஆண்டாளை வெகுகாலம் காக்க வைத்ததை எண்ணி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவள் எம்பெருமானைப் படுக்கையை விட்டு எழுந்து, சில அடிகள் நடந்து, அவனுடைய சீரிய ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருளி, சபையில் தன் விண்ணப்பத்தை ஒரு ராஜாவைப் போலே கேட்குமாறு ப்ரார்த்திக்கிறாள்.
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளி கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்
காயாம்பூப்போலே கறுத்த நிறத்தை உடையவனே!
மழைக் காலத்தில் மலைக் குகையில் பொருந்தி இருந்து தூங்குகின்ற வீரம் மிகுந்த சிங்கம் விழித்தெழுந்து, தீப்பொறி பறக்கும் தன் கண்களை விழித்து,
வாஸனை மிகுந்த பிடரி மயிர்கள் எழும்படி எல்லாப் பக்கங்களிலும் அசைத்து,
உடம்பை உதறி சோம்பல் முறித்து,
உடலை நேராக்கி நிமிர்த்து,
கர்ஜனை செய்து வெளியில் புறப்பட்டு வருவதுபோலே,
உன்னுடைய திருமாளிகையின் உள்ளிருந்து இவ்விடத்திலே எழுந்தருளி
அழகிய அமைப்புடைய மேன்மைபெற்ற ஸிம்ஹாஸனத்தின் மீது எழுந்தருளி இருந்து
நாங்கள் வந்த கார்யத்தை விசாரித்து அருள வேண்டும்.
நன்றி - Upasana Govindarajan Art |
ஸ்ரீ ஆண்டாள்,காஞ்சி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் |
அன்புடன்
அனுபிரேம்
சீரிய சிம்மா போற்றி.
ReplyDeleteசிறப்பு.
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய திருப்பாவை பாசுரமும், அதன் விளக்கமும் மிகவும் நன்றாக உள்ளது. காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் குடியிருக்கும் ஸ்ரீஆண்டாளை பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.