01 January 2022

பதினேழாம் பாசுரம் - அம்பரமே தண்ணீரே

 பதினேழாம் பாசுரம் - இதில் ஸ்ரீ நந்தகோபன், யசோதை மற்றும் நம்பி மூத்த பிரானை (பலராமன்) எழுப்புகிறாள்.





அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்

      எம்பெருமான் நந்தகோபாலா ! எழுந்திராய்,

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

      எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்

அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த

      உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்

செம் பொற் கழலடிச் செல்வா! பலதேவா!

      உம்பியும் நீயும் உறங்கேல் ஓர்  எம்பாவாய்


வஸ்த்ரத்தையும் நீரையும் சோற்றையுமே தர்மம் செய்யும் எங்கள் ஸ்வாமியான நந்தகோபரே! எழுந்திரும். 

வஞ்சிக்கொம்பு போன்ற இடைப்பெண்களுக்கெல்லாம் தலைவியாக இருப்பவளே! 

ஆயர் குலத்துக்கு ஒளி விளக்காய் இருப்பவளே! 

எங்கள் தலைவியான யசோதைப்பிராட்டியே! உணர்ந்தெழுவாய். 

வானத்தைத் துளைத்துக்கொண்டு உயர்ந்து எல்லா உலகங்களையும் அளந்தருளிய தேவாதி தேவனே! உறக்கத்தை விட்டு எழுந்திருக்கவேண்டும். 

சிவந்த பொன்னால் செய்த வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையுடைய செல்வனே! 

பலராமனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் திருப்பள்ளி உணர்ந்தருள வேண்டும்.



நன்றி - Upasana Govindarajan Art



ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீபெரும்புதூர்.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்


2 comments:

  1. ஓங்கி உலகளந்த உம்பர் கோமான் திருவடிகள் சரணம்.

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பாசுரமும் அதற்கான விளக்கமும் சிறப்பு. தொடரட்டும் பாசுர அமுதம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete