01 January 2022

தொண்டரடிப்பொடியாழ்வார்

   தொண்டரடிப் பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம் இன்று - மார்கழியில் கேட்டை





தொண்டரடி பொடியாழ்வார்  வாழி திருநாமம்!

மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரைசூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும்  செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சி பத்து உரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடியாழ்வார் துணைப் பதங்கள் வாழியே..!










பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்

நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

பாடிய பாடல் : 55

வேறு பெயர் : விப்பிர நாராயணர்

சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்



விப்ரநாராயணர் என்ற தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பாசுரங்கள் திருமாலை என்ற 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி என்ற 10 பாசுரங்களும் ஆக, 55 பாசுரங்கள்.

 திருவரங்கத்து பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டு வாழ்ந்த இவர் தேவதேவி என்ற பெண்ணின் அழகில் மயங்கிச் சில நாள் நிலைதவறி மீண்டும் பெருமானின் திருவருளால் பாகவத கைங்கரியத்தில் ஈடுபட்டு பரமனடி சேர்ந்தவர்.


மனத்தில் ஓர் தூய்மைஇல்லை வாயில் ஓர்இன்சொல் இல்லை * 
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா * 
புனத்துழாய் மாலையானே! பொன்னி சூழ் திருவரங்கா !* 
எனக்கு இனிக்கதி என் சொல்லாய்? என்னை ஆளுடைய கோவே! 

30 901


தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படத்தாரில் அல்லேன் * 
உவர்த்த நீர் போல என்தன் உற்றவர்க்கு ஒன்றும் அல்லேன் * 
துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கு அறத் துரிசன் ஆனேன் * 
அவத்தமே பிறவி தந்தாய் அரங்க மா நகருளானே! 

31 902


ஆர்த்து வண்டு அலம்பும்சோலை அணி திருவரங்கந் தன்னுள் * 
கார்த்திரள் அனைய மேனிக் கண்ணனே! உன்னைக் காணும் * 
மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய * 
மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே.


32 903


மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரில் பட்டு * 
பொய் எல்லாம் பொதிந்துகொண்ட போட்கனேன் வந்து நின்றேன் * 
ஐயனே! அரங்கனே! உன் அருள் என்னும் ஆசை தன்னால் * 
பொய்யனேன் வந்துநின்றேன் பொய்யனேன், பொய்யனேனே.

33 904




உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லா * 
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு * 
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று * 
வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவு அறச் சிரித்திட்டேனே!

34 905


தாவி  அன்று உலகம் எல்லாம் தலை விளாக்கொண்ட எந்தாய் * 
சேவியேன் உன்னை அல்லால் சிக்கெனச் செங்கண்மாலே! * 
ஆவியே! அமுதே! என்தன் ஆருயிர் அனைய எந்தாய் * 
பாவியேன் உன்னை அல்லால் பாவியேன், பாவியேனே.

35 906


மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே! மதுர ஆறே! * 
உழைக் கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு * 
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே! * உன்னை யன்றே 
அழைக்கின்றேன் ஆதிமூர்த்தி! அரங்க மா நகருளானே! 

36 907


தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கங்கத்துள் ஓங்கும் * 
ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயும் ஆவார்? * 
எளியது ஓர் அருளும் அன்றே என் திறத்து ? எம்பிரானார் * 
அளியன் நம் பையல் என்னார், அம்மவோ! கொடியவாறே! 

37 908








ஓம் நமோ நாராயணாய நம!!
தொண்டரடிப் பொடியாழ்வார்  திருவடிகளே சரணம்!!




 அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே!

    ReplyDelete
  2. தகவல் பதிவு சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete