20 January 2022

திருமழிசைப்பிரான்

  இன்று   திருமழிசையாழ்வார்   அவதார திருநட்சத்திரம் .....


தையில் மகம்........




திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே !

அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே!

இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே!

எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே!

முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே!

முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே!

நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே!

நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே!






திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)

பிறந்த காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு

நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி)

கிழமை : ஞாயிறு

தந்தை : பார்க்கவ முனிவர்

தாய் : கனகாங்கி

எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

பாடல்கள் : 216

சிறப்பு : திருமாலின் ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்














அரங்கனே! தரங்கநீர் கலங்கவன்று, குன்றுசூழ் * 
மரங்கள்தேயமாநிலம்குலுங்க மாசுணம்சுலாய் * 
நெருங்க, நீகடைந்தபோது நின்றசூரரெஞ்செய்தார்? * 
குரங்கையாளுகந்தவெந்தை! கூறுதேறவேறிதே.

21 772

பண்டுமின்றுமேலுமாய் ஓர்பாலனாகி ஞாலமேழ் * 
உண்டுமண்டியாலிலைத்துயின்ற ஆதிதேவனே * 
வண்டுகிண்டுதண்டுழாய் அலங்கலாய்! கலந்தசீர்ப் * 
புண்டரீகபாவைசேரும் மார்ப! பூமிநாதனே.

22 773

வானிறத்தொர் சீயமாய் வளைந்தவாளெயிற்றவன் * 
ஊன்நிறத்துகிர்த்தலம் அழுத்தினாய்! உலாயசீர் * 
நால்நிறத்தவேதநாவர் நல்லயோகினால்வணங்கு * 
பால்நிறக்கடல்கிடந்த பற்பநாபனல்லையே?

23 774


கங்கைநீர்பயந்தபாத பங்கயத்தெம்மண்ணலே! * 
அங்கையாழிசங்குதண்டு வில்லும்வாளுமேந்தினாய்! * 
சிங்கமாயதேவதேவ! தேனுலாவுமென்மலர் * 
மங்கைமன்னிவாழுமார்ப! ஆழிமேனிமாயனே! 

24 775


வரத்தினில்சிரத்தைமிக்க வாளெயிற்றுமற்றவன் * 
உரத்தினில்கரத்தைவைத்து உகிர்த்தலத்தையூன்றினாய் * 
இரத்திநீயிதென்னபொய்? இரந்தமண்வயிற்றுளே 
கரத்தி * உன்கருத்தை யாவர்காணவல்லர்கண்ணனே.

25 776





ஆணினோடுபெண்ணுமாகி அல்லவோடுநல்லவாய் * 
ஊணொடோசையூறுமாகி ஒன்றலாதமாயையாய் * 
பூணிபேணுமாயனாகிப் பொய்யினோடுமெய்யுமாய் * 
காணிபேணும்மாணியாய்க் கரந்துசென்றகள்வனே.


26 777


விண்கடந்தசோதியாய் விளங்குஞானமூர்த்தியாய் * 
பண்கடந்ததேசமேவு பாவநாசநாதனே * 
எண்கடந்தயோகினோடு இரந்துசென்றுமாணியாய் * 
மண்கடந்தவண்ணம்நின்னை யார்மதிக்கவல்லரே?

27 778


படைத்தபாரிடந்தளந்து அதுண்டுமிழ்ந்து பௌவநீர் * 
படைத்தடைத்ததிற்கிடந்து முன்கடைந்தபெற்றியோய்! * 
மிடைத்தமாலிமாலிமான் விலங்குகாலனூர்புக * 
படைக்கலம்விடுத்த பல்படைத்தடக்கைமாயனே! 

28 779


பரத்திலும்பரத்தையாதி பௌவநீரணைக்கிடந்து * 
உரத்திலும்மொருத்திதன்னை வைத்துகந்து அதன்றியும் * 
நரத்திலும்பிறத்திநாத ஞானமூர்த்தியாயினாய்! * 
ஒருத்தரும்நினாதுதன்மை இன்னதென்னவல்லரே.

29 780


வானகம்மும்மண்ணாகம்மும் வெற்புமேழ்கடல்களும் * 
போனகம்செய்தாலிலைத்துயின்ற புண்டரீகனே! * 
தேனகஞ்செய்தண்ணறும் மலர்த்துழாய்நன்மாலையாய்! * 
கூனகம்புகத்தெறித்த கொற்றவில்லியல்லையே?

30 781









ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!




அன்புடன்
அனுபிரேம்...

No comments:

Post a Comment