30 January 2021

திருமழிசைப்பிரான்

 இன்று   திருமழிசையாழ்வார்   அவதார திருநட்சத்திரம் .....


தையில் மகம்........திருமழிசையாழ்வார் வாழி திருநாமம்!

அன்புடனந்தாதி தொண்ணூற்றாறுரைத்தான் வாழியே !

அழகாருந் திருமழிசையமர்ந்த செல்வன் வாழியே!

இன்பமிகு தையில் மகத்திங்குதித்தான் வாழியே!

எழிற்சந்தவிருத்தம் நூற்றிருபதீந்தான் வாழியே!

முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே!

முழுப்பெருக்கில் பொன்னியெதிர் மிதந்தசொல்லோன் வாழியே!

நன்புவியில் நாலாயிரத்தெழுநூற்றான் வாழியே!

நங்கள் பத்திசாரன் இருநற்பதங்கள் வாழியே!


திருமழிசையாழ்வார்

பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்)

பிறந்த காலம் : கி.பி.7ம் நூற்றாண்டு

நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி)

கிழமை : ஞாயிறு

தந்தை : பார்க்கவ முனிவர்

தாய் : கனகாங்கி

எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம்

பாடல்கள் : 216

சிறப்பு : திருமாலின்ஆழி என்ற சக்கரத்தாழ்வாரின் அம்சம்

சொல்லினால் தொடர்ச்சி நீ சொலப்படும் பொருளும் நீ * 
சொல்லினால்  சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ * 
சொல்லினால் படைக்க நீபடைக்க வந்து தோன்றினார் * 
சொல்லினால் சுருங்க நின்குணங்கள் சொல்லவல்லரே? 

11 762 


உலகு தன்னை நீ படைத்தி உள்ளொடுக்கிவைத்தி * மீண்டு
உலகு தன்னுளே பிறத்தி ஒரிடத்தையல்லையால் *
உலகு நின்னொடொன்றி நிற்க வேறுநிற்றியாதலால் *
உலகில் நின்னையுள்ள சூழல் யாவர் உள்ளவல்லரே?

12 763  


இன்னையென்று சொல்லலாவது இல்லையாதும் இட்டிடைப் * 
பின்னை கேள்வனென்பர் உன்பிணக்குணர்ந்த பெற்றியோர் * 
பின்னையாய கோலமோடு பேரும் ஊரும் ஆதியும் * 
நின்னையார் நினைக்கவல்லர்? நீர்மையால் நினைக்கிலே.

13 764

தூய்மை யோகமாயினாய்! துழாயலங்கல் மாலையாய்! * 
ஆமையாகியாழ்கடல்துயின்ற ஆதிதேவ! * நின் 
நாமதேயமின்னதென்ன வல்லமல்லவாகிலும் * 
சாமவேதகீதனாய சக்ரபாணியல்லையே? 

14 765அங்கம்  ஆறும் வேத நான்கும் ஆகி நின்றவற்றுளே * 
தங்குகின்ற தன்மையாய்! தடங்கடல் பணத்தலை * 
செங்கண் நாகணைக்கிடந்த செல்வமல்கு சீரினாய் * 
சங்கவண்ணமன்னமேனி சார்ங்கபாணியல்லையே?

15 766தலைக் கணத்துகள் குழம்பு சாதி சோதி தோற்றமாய் * 
நிலைக் கணங்கள் காணவந்து நிற்றியேலும் நீடிரும் * 
கலைக்கணங்கள் சொற்பொருள் கருத்தினால் நினைக்கொணா * 
மலைக்கணங்கள்போலுணர்த்தும் மாட்சி நின்றன் மாட்சியே.

16 767
ஏகமூர்த்தி மூன்றுமூர்த்தி நாலுமூர்த்தி நன்மைசேர் * 
போகமூர்த்தி புண்ணியத்தின்மூர்த்தி எண்ணில்மூர்த்தியாய் * 
நாகமூர்த்திசயனமாய் நலங்கடல்கிடந்து * மேல் 
ஆகமூர்த்தியாயவண்ணம் என்கொல்? ஆதிதேவனே! 

17 768


விடத்தவாயொராயிரம் இராயிரம்கண்வெந்தழல் * 
விடுத்து வீள்விலாதபோகம் மிக்கசோதி தொக்கசீர் * 
தொடுத்து மேல்விதானமாய பௌவநீரராவணை * 
படுத்த பாயல் பள்ளிகொள்வது என்கொல்? வேலைவண்ணானே.

18 769


புள்ளாதாகி வேதம் நான்கும் ஒதினாய் அதன்றியும் * 
புள்ளின் வாய்பிளந்து புட்கொடிப் பிடித்த பின்னரும் * 
புள்ளையூர்தியாதலால் அதன்கொல்? மின்கொள் நேமியாய்! * 
புள்ளின் மெய்ப் பகைக்கடல் கிடத்தல் காதலித்ததே. 

19 770


கூசமொன்றுமின்றி மாசுணம்படுத்து வேலைநீர் * 
பேசநின்ற தேவர்வந்து பாடமுன்கிடந்ததும் * 
பாசம்நின்ற நீரில்வாழும் ஆமையான கேசவா * 
ஏசஅன்று நீகிடந்தவாறு கூறுதேறவே.

20 771


ஓம் நமோ நாராயணாய நம!!
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்!!
அன்புடன்
அனுபிரேம்...

5 comments:

 1. படங்கள் அனைத்தும் அழகு.

  தகவல்கள் நன்று.

  ReplyDelete
 2. அருமை..மிக அருமை... என் மனதைக் கவர்ந்த திருச்சந்த விருத்தத்திலிருந்து பாடல்களைப் பகிர்ந்தது மிகச் சிறப்பு.

  பாடல் 18 - விடுத்து வீள்விலாத போகம் என்று வரணும். விடத்த வீள் என்று வந்திருக்கு. மற்ற இரண்டு பாசுரங்களையும் பிறகுதான் பார்க்கணும்.

  திருமழிசையாழ்வார் அவதரித்த ஊருக்கும், பரமபதித்த ஊருக்கும் சென்று சேவித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார் ..சரி செய்துவிட்டேன்....

   Delete
 3. அருமையான பதிவு , படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete