13 January 2021

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

 ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...






ஆண்டாள் வாழித்திருநாமம்




திருவாடிப் பூரத்திற் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதுஞ் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே

உயரரங்கர்க்கே கண்ணியுகந்தளித்தாள் வாழியே

மருவாருந் திருமல்லி வளநாடி வாழியே

வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பாதங்கள் வாழியே 






அன்னவயல்புதுவையாண்டாள் * அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்

பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை

சூடிக்கொடுத்தாளைச் சொல்லு

சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! * தொல்பாவை

பாடிஅருளவல்லபல்வளையாய்! * நாடி நீ

வேங்கடவற்குகென்னைவிதியென்ற இம்மாற்றம் *

நாம்கடவாவண்ணமே நல்கு.


ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆண்டாள் 








ஸ்ரீ  ஆண்டாளின் அனுகிரகத்தால் தினமும் பாசுரங்களை, அழகிய படங்களுடன்  

பதிவிடும் பாக்கியம் பெற்றேன்... இதன் மூலம் பல அற்புத செய்திகளை 
அறியும் வாய்ப்பும் கிடைத்தது ....
இவ்வழகிய படங்களை முக நூலில் பதிவிட்ட அன்பர்களுக்கு நன்றிகள் பல ....

தொடர்ந்து இங்கு வந்து சேவித்து , இனிய ஊக்கம் தரும் கருத்துரைகளை தந்த நண்பர்களுக்கும்


 என் மனமார்ந்த நன்றிகள்...


ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



   அன்புடன்
   அனுபிரேம்


6 comments:

  1. வணக்கம் சகோதரி

    அருமையான தெய்வீக பதிவுகளை தொடர்ந்து தந்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. திருப்பாசுரங்களையும் தெய்வீகத் திருக்கோலங்களையும் வழங்கி மார்கழியை சிறப்பித்து விட்டீர்கள்..

    ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. வாழித் திருநாமத்தில்,

    வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே

    மிஸ்ஸிங்

    ReplyDelete
  4. இந்த மாதம் முழுவதும் மிகச் சிறப்பாக திருப்பாவை இடுகைகள் போட்டிருந்தீங்க. பாராட்டுக்கள். அதற்காக மெனெக்கெட்டு கோர்த்த படங்களும் மிக அழகு.

    எவ்வளவு மெனெக்கெட்டு ஆண்டாளுக்கு வித வித அலங்காரங்கள் செய்கிறார்கள் இந்த அர்ச்சகர்கள்......

    பக்தி மணம் கமழ்ந்த பதிவுகள்

    உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  5. மாதம் முழுவதும் பக்தி மணம் கமழும் பதிவுகள் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்....

    ReplyDelete
  6. ஆண்டாள் பாசுரங்கள் தொடரக பதிந்தமைக்கு வாழ்த்துக்கள். அழகிய படங்களும் கூட ரசித்தேன்.

    ReplyDelete