25 December 2019

தொண்டரடிப் பொடியாழ்வார்

இன்று    தொண்டரடிப் பொடியாழ்வார்   அவதார திருநட்சித்திரம்...........மார்கழியில் கேட்டை.....








தொண்டரடி பொடியாழ்வார்  வாழி திருநாமம்!




மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே
மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே
தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே
திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே
பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே
பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே
தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே



தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே..!




பிறந்த இடம் : திருமண்டங்குடி (தஞ்சாவூர் அருகில்)

பிறந்த காலம் : எட்டாம் நூற்றாண்டு பராபவ ஆண்டு மார்கழி மாதம்

நட்சத்திரம் : கேட்டை (தேய்பிறை சதுர்த்தசி திதி)

கிழமை : செவ்வாய்

எழுதிய நூல் : திருமாலை, திருப்பள்ளி எழுச்சி

பாடிய பாடல் : 55

வேறு பெயர் : விப்பிர நாராயணர்

சிறப்பு : திருமாலின் வனமாலையின் அம்சம்



விப்ரநாராயணர் என்ற தொண்டரடிப் பொடியாழ்வார் பாடிய பாசுரங்கள் திருமாலை என்ற 45 பாசுரங்களும் திருப்பள்ளியெழுச்சி என்ற 10 பாசுரங்களும் ஆக, 55 பாசுரங்கள்.

 திருவரங்கத்து பெரிய பெருமாளுக்கு ஆட்பட்டு வாழ்ந்த இவர் தேவதேவி என்ற பெண்ணின் அழகில் மயங்கிச் சில நாள் நிலைதவறி மீண்டும் பெருமானின் திருவருளால் பாகவத கைங்கரியத்தில் ஈடுபட்டு பரமனடி சேர்ந்தவர்.





நாட்டினான்தெய்வம் எங்கும் நல்லதோரருள்தன்னாலே * 
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும்வண்ணம் * 
கேட்டிரேநம்பிமீர்காள்! கெருடவாகனனும்நிற்க * 
சேட்டைதன்மடியகத்துச் செல்வம்பார்த்திருக்கின்றீரே.

10 881


ஒருவில்லால்ஓங்குமுந்நீரடைத்து உலகங்களுய்ய * 
செருவிலே அரக்கர்கோனைச்செற்ற நம்சேவகனார் * 
மருவியபெரியகோயில் மதிள்திருவரங்கமென்னா * 
கருவிலேதிருவிலாதீர்! காலத்தைக்கழிக்கின்றீரே.

11 882





 



நமனும்முற்கலனும் பேச நரகில்நின்றார்கள்கேட்க * 
நரகமேசுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி * 
அவனதூர் அரங்கமென்னாது அயர்த்து வீழ்ந்தளியமாந்தர் * 
கவலையுள்படுகின்றாரென்று அதனுக்கேகவல்கின்றேனே.

12 883


எறியுநீர்வெறி கொள்வேலை மாநிலத்துஉயிர்களெல்லாம் * 
வெறிகொள்பூந்துளவமாலை விண்ணவர்கோனையேத்த * 
அறிவிலாமனிசரெல்லாம் அரங்கமென்றழைப்பராகில் * 
பொறியில்வாழ் நரகமெல்லாம் புல்லெழுந்தொழியுமன்றே.

13 884



வண்டினம்முரலும்சோலை மயிலினம்ஆலும்சோலை * 
கொண்டல்மீதணவும்சோலை குயிலினம்கூவும்சோலை * 
அண்டர்கோன்அமரும்சோலை அணிதிருவரங்கமென்னா * 
மிண்டர்பாய்ந்துஉண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கிடுமினீரே. (2)

14 885



மெய்யர்க்கேமெய்யனாகும் விதியிலாஎன்னைப்போல * 
பொய்யர்க்கே பொய்யனாகும்புட்கொடியுடையகோமான் * 
உய்யப்போமுணர்வினார்கட்கு ஒருவனென்றுஉணர்ந்தபின்னை * 
ஐயப்பாடறுத்துத்தோன்றும் அழகனூர்அங்கமன்றே. 

15 886










சூதனாய்க்கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்தகாலம் * 
மாதரார்கயற்கணென்னும் வலையுள்பட்டழுந்துவேனை * 
போதரேயென்றுசொல்லிப் புந்தியுள்புகுந்து * தன்பால் 
ஆதரம்பெருகவைத்த அழகனூர்அரங்கமன்றே.

16 887


விரும்பிநின்றேத்த மாட்டேன் விதியிலேன்மதியொன்றில்லை * 
இரும்புபோல்வலியநெஞ்சம் இறையிறைஉருகும் வண்ணம் * 
சுரும்பமர்சோலைசூழ்ந்த அரங்கமாகோயில் கொண்ட * 
கரும்பினைக்கண்டுகொண்டு என்கண்ணிணை களிக்குமாறே!


17 888











இனிதிரைத்திவலைமோத எறியும் தண்பரவைமீதே * 
தனிகிடந்து அரசுசெய்யும் தாமரைக்கண்ணன்எம்மான் * 
கனியிருந்தனையசெவ்வாய்க் கண்ணணைக்கண்டகண்கள் * 
பனியரும்புஉதிருமாலோ! என்செய்கேன்பாவியேனே?

18 889



குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி * 
வடதிசைபின்புகாட்டித் தென்திசைஇலங்கை நோக்கி * 
கடல்நிறக்கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு * 
உடலெனக்குஉருகுமாலோ? என்செய்கேன்? உலகத்தீரே! (2)


19 890





முந்தைய பதிவுகள்



ஓம் நமோ நாராயணாய நம!!
தொண்டரடிப் பொடியாழ்வார்  திருவடிகளே சரணம்!!




 அன்புடன்
அனுபிரேம்

7 comments:

  1. இப்படி ஒரு ஆழ்வார் கோயில் இருப்பதே இப்போதான் அறிகிறேன்.

    ReplyDelete
  2. தொண்டரடிப் பொடியாழ்வர் வாழ்க்கை வரலாறு அருமை.
    பதிவும், படங்களும் மிக அருமை.

    ஓம் நமோ நாராயணாய நம!!
    தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்!!

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    தொண்டரடிப் பொடியாழ்வார் பற்றிய வாழ்க்கை வரலாறு அருமையாக உள்ளது படங்களும், பாகங்களும் அழகு. தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளை நானும் வணங்கிக் கொள்கிறேன்.
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    ReplyDelete
  4. தொண்டரடிப்பொடியாழ்வார் பற்றிய தகவல்கள் அனைத்தும் சிறப்பு. பகிர்ந்து கொண்ட படங்கள் அனைத்தும் சிறப்பு. தொடரட்டும் தகவல்களும் பதிவுகளும். வாழ்த்துகள்.

    ReplyDelete