'மாயனை மன்னு' ️
மாயனை மன்னுவடமதுரைமைந்தனை *
தூயபெருநீர் யமுனைத்துறைவனை *
ஆயர்குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை *
தாயைக்குடல்விளக்கம்செய்த தாமோதரனை *
தூயோமாய்வந்துநாம் தூமலர் தூவித்தொழுது *
வாயினால்பாடி மனத்தினால்சிந்திக்க *
போயபிழையும் புகுதருவான்நின்றனவும் *
தீயினில்தூசாகும் செப்பேலோரெம்பாவாய்.
பொருள்:
வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும்,
பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும்,
ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும்,
தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும்,
இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை,
நாங்கள் தூய்மையாக நீராடி,
மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம்.
அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்!
செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
பாடல் விளக்கம், படங்கள் எல்லாம் அருமை.
ReplyDeleteஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
நன்றி மா தங்களின் தொடர் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் ...
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய திருப்பாவை பாசுரம் பாடல் ஐந்தாவதையும் பாடி மகிழ்ந்தேன். பாடலும், அதற்குரிய பொருளும் சிறப்பாக தந்துள்ளீர்கள். ஸ்ரீ ஆண்டாள் அன்னையின் படங்கள் நன்றாக உள்ளது.
கானமேயான கண்ணனின் அருகாமையை விரும்பி அவனை விட்டு அகலாமல் லயித்திருக்க வேண்டி, பசுவின் கன்றும், பறவைகளும், இயற்கை அழகுடன் இணைந்திருக்கும் அழகான படம் மிகவும் கவர்ந்தது.
நேற்றைய தங்கள் பதிவுக்கு நான் கருத்துரை தந்ததாக நினைக்கிறேன்.இல்லையா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி அக்கா தங்களின் தொடர் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் ...
Deleteபயணத்தில் இருந்ததால் நெட்வொர்க் பிரச்சனைகளால் நேற்றைய கருத்துரையை வெளியிட தாமதம் அக்கா ...