கற்றுக் கறவை
"பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? "
"பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? "
கற்றுக்கறவைக் கணங்கள்பலகறந்து *
செற்றார்திறலழியச் சென்றுசெருச்செய்யும் *
குற்றமொன்றில்லாத கோவலர்தம்பொற்கொடியே! *
புற்றரவல்குல் புனமயிலே! போதராய் *
சுற்றத்துத்தோழிமா ரெல்லாரும்வந்து * நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன்பேர்பாட *
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி! * நீ
எற்றுக்குஉறங்கும் பொருளேலோரெம்பாவாய்.
செற்றார்திறலழியச் சென்றுசெருச்செய்யும் *
குற்றமொன்றில்லாத கோவலர்தம்பொற்கொடியே! *
புற்றரவல்குல் புனமயிலே! போதராய் *
சுற்றத்துத்தோழிமா ரெல்லாரும்வந்து * நின்
முற்றம்புகுந்து முகில்வண்ணன்பேர்பாட *
சிற்றாதேபேசாதே செல்வப்பெண்டாட்டி! * நீ
எற்றுக்குஉறங்கும் பொருளேலோரெம்பாவாய்.
பொருள்:
கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களும் ஆன,
ஒரு குறையுமில்லாத,
இடையவர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே!
புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும்,
கானகத்து மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே,
விழித்தெழுந்து வருவாயாக!
ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி,
கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்!
செல்வம் நிறைந்த பெண்ணை, நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவதன் அர்த்தத்தை நாங்கள் அறியோம்!
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அன்புடன்
அனுபிரேம்
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.
ReplyDeleteபதிவு அருமை
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅருமையான பாடலுக்கு அழகாக விளக்கம் தந்துள்ளீர்கள். மிகவும் ரசித்தேன். நீங்களும், சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களும் இப்படி நாள்தோறும் மார்கழி மாதத்தில் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவையை பகிர்ந்து அந்த பாடல்களுக்கு பொருளும் விளக்கமாக அளித்து வருவது படிக்க நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சிறப்பான பகிர்வு. தொடரட்டும் திருப்பாவை அமுதம்.
ReplyDelete