14 December 2019

ஷாஹி பாவ்லி -பரா இமாம்பரா




வாழ்க வளமுடன் 






ஷாஹி பாவ்லி ஒரு கிணறு போன்ற அமைப்பு ..இது  நீர் தேக்கமாகவும்  பயன் படுத்தப்படுவதற்காக கட்டப்பட்டது .

இந்த கிணற்றின் நீர் அருகிலுள்ள  நதியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் சில கருத்துக்கள் உள்ளன. இது ஒரு வித்தியாசமான  கட்டடக்கலை வடிவமைப்பு .




நவாப் ஆசிப்-உத்-த லா 1784-1794 ஆண்டுகளில் இதைக் கட்டியெழுப்பினார், மேலும் அந்தக் காலங்களில் மிகவும் திறமையான கட்டிடக் கலைஞர்களில் ஒருவரான கிஃபாயத்-உல்லா இதனை  வடிவமைத்தார்.

பாடா இமாம்பராவின் பிரதான முற்றத்தின் கிழக்கே ஷாஹி பாவ்லி அமைந்துள்ளது. ஷாஹி பாவோலிக்கு நுழைவு இரட்டை வளைவு நுழைவாயில் வழியாகும்.

மேலும் இங்கு  ​​ திறந்த விமானம் போன்ற  அமைப்பின் வழியில் படிகள்  இந்த கிணற்றில் இறங்குகிறது.

இந்த கிணற்றை உள்ளடக்கி பல மாடி அமைப்பு உள்ளது . இங்கும்  பல திறந்த வளைவு ஜன்னல்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட காட்சியகங்கள் உள்ளன .








ஆனால் மக்கள் தங்களின் குப்பைகளை இதில் வீசி வழக்கம் போல பாழ்படுத்தி வைத்துள்ளனர்.






வெளியே 


அடுத்த இடத்திற்கு  செல்லும் வழியில் இருந்த கடிகார கூண்டு ...









முந்தைய பதிவுகள்

1.லக்னோ பயணத்தில் ...

2.விளையாட்டு மைதானத்தில் .....

3 .லா மார்டினியர் காலேஜ் ,லக்னோ

4.லா மார்டினியர் காலேஜ் - 2

5.பரா இமாம்பரா (Bara Imambara)  , லக்னோ 

6.பூல் பூலையா

7.பரா இமாம்பரா மேல் தளம் .....



தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம்



2 comments:

  1. படங்களும் பகிர்வும் அருமை. தகவல்களுக்கு நன்றி.

    லக்னோ பயணத்தின் முந்தைய பதிவுகளையும் கண்டேன். நன்று. தொடருங்கள்.

    ReplyDelete
  2. //மக்கள் தங்களின் குப்பைகளை இதில் வீசி வழக்கம் போல பாழ்படுத்தி வைத்துள்ளனர்.//

    அதை பார்க்கும் போது கஷ்டமாய் இருக்கிறது.

    ஷாஹி பாவ்லி மிக அழகாய் இருக்கிறது.

    ReplyDelete