30 December 2019

திருப்பாவை – பாசுரம் 14

உங்கள் புழக்கடை

"எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?"






உங்கள்புழக்கடைத் தோட்டத்துவாவியுள் *

செங்கழுனீர்வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய்கூம்பின காண் *

செங்கல்பொடிக்கூறை வெண்பல்தவத்தவர் *

தங்கள்திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் *

எங்களைமுன்னம் எழுப்புவான்வாய்பேசும் *

நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்! *

சங்கொடுசக்கரம் ஏந்தும்தடக்கையன் *

பங்கயக்கண்ணானைப் பாடேலோரெம்பாவாய்.







எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே!

 கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே!

 உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன.

ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன.

காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.

ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும்,

தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்


4 comments:

  1. முதல் படம் மோகனி அவதாரம் படம் தானே!
    படங்கள் அழகு. விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. மோகனி அவதாரம் படம் இல்ல மா ...

      ஆண்டாளின் திவ்ய தரிசனம் மா .

      Delete
  2. சிறப்பான விளக்கம். படமும் நன்று.

    தினம் தினம் திருப்பாவை - பதிவர்கள் மூலம் நானும் திருப்பாவை தினமும் படிக்க வாய்ப்பு! நன்றி.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள்,பாசுரம், அதன் விளக்கமென பதிவு மிக அருமையாக உள்ளது. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் கேள்விகள் நியாந்தான். சொன்ன வாக்கை காப்பாற்றுதலில் பின் தங்க கூடாது என வலியுறுத்தும் கருத்துக்கள் அருமை. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் பாதங்களை பற்றி போற்றுவோம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete