18 December 2019

திருப்பாவை – பாசுரம் 2

வையத்து வாழ்வீர்காள்!

நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்..












வையத்துவாழ்வீர்காள்! நாமும்நம்பாவைக்கு *

செய்யும்கிரிசைகள் கேளீரோ * பாற்கடலுள் 

பையத்துயின்ற பரமனடிபாடி *

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலேநீராடி *

மையிட்டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம் *

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம் *

ஐயமும்பிச்சையும் ஆந்தனையும்கைகாட்டி *


உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்.







பொருள்:

 திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! 

நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். 

நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்).

 தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது. 

தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. 

இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.







ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.




அன்புடன்,
அனுபிரேம்.

2 comments:

  1. பாடலும், பொருளும், அருள்வரிகள் அருமை.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அழகான படங்கள். திருப்பாவை பாடலும்,அதன் பொருளும் மிக அருமை. அழகாக கூறியுள்ளீர்கள். மார்கழி நன்னாள் முழுதும் ஸ்ரீ கோதை நாச்சியாரின் திருவடியை போற்றி துதிப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete