04 January 2019

தொண்டரடிப் பொடியாழ்வார்

இன்று    தொண்டரடிப் பொடியாழ்வார்   அவதார தினம் .....

மார்கழியில் கேட்டை.....









 தொண்டரடி பொடியாழ்வார்  வாழி திருநாமம்!


மண்டங்குடியதனை வாழ்வித்தான் வாழியே


மார்கழியிற் கேட்டைதனில் வந்துதித்தான் வாழியே

தெண்டிரை சூழரங்கரையே தெய்வமென்றான் வாழியே

திருமாலையொன்பதஞ்சுஞ் செப்பினான் வாழியே

பண்டு திருப்பள்ளியெழுச்சிப் பத்துரைத்தான் வாழியே

பாவையர்கள் கலவிதனைப் பழித்தசெல்வன் வாழியே

தொண்டுசெய்து துளபத்தால் துலங்கினான் வாழியே

தொண்டரடிப் பொடியாழ்வார் துணைப்பதங்கள் வாழியே..!








875

மொய்த்த வல்வினையுள் நின்று*  மூன்று எழுத்துடைய பேரால்,*
கத்திர பந்தும் அன்றே*  பராங்கதி கண்டு கொண்டான்,*

இத்தனை அடியரானார்க்கு*  இரங்கும் நம் அரங்கனாய*
பித்தனைப் பெற்றும் அந்தோ!*  பிறவியுள் பிணங்கு மாறே!  



876


பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்*  பெரியதோர் இடும்பை பூண்டு*
உண்டிராக் கிடக்கும் போது*  உடலுக்கே கரைந்து நைந்து,*

தண்டுழாய் மாலை மார்பன்*  தமர்களாய்ப் பாடி யாடி,* 
தொண்டு பூண்டமுதம் உண்ணாத்*  தொழும்பர் சோறு உகக்குமாறே!











877
மறம்சுவர் மதிளெடுத்து*  மறுமைக்கே வெறுமை பூண்டு,* 
புறம்சுவர் ஓட்டை மாடம்*  புரளும்போது அறிய மாட்டீர்,*

அறம் சுவராகி நின்ற*  அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,* 
புறம்சுவர் கோலம் செய்து*  புள் கவ்வக் கிடக்கின்றீரே!   

878

புலையறம் ஆகிநின்ற*  புத்தொடு சமண மெல்லாம்,* 
கலையறக் கற்ற மாந்தர்*  காண்பரோ கேட்பரோதாம்,*

தலை அறுப்புண்டும் சாவேன்*  சத்தியம் காண்மின் ஐயா,* 
சிலையினால்  இலங்கை செற்ற*  தேவனே தேவன் ஆவான்.   





879

வெறுப்பொடு சமணர் முண்டர்*  விதியில் சாக்கியர்கள்,*  நின்பால்- 
பொறுப்பரியனகள் பேசில்*  போவதே நோயதாகி* 

குறிப்பெனக் கடையும் ஆகில்*  கூடுமேல் தலையை*  ஆங்கே,- 
அறுப்பதே கருமம் கண்டாய்*  அரங்கமா நகருளானே!       






880

மற்றுமோர் தெய்வம் உண்டே*  மதியிலா மானி டங்காள்,*
உற்றபோது அன்றி நீங்கள்*  ஒருவன் என்று உணர மாட்டீர் ,*


அற்றம்மேல் ஒன்று அறியீர் *  அவனல்லால் தெய்வ  மில்லை,* 
கற்றினம் மேய்த்த  எந்தை*  கழலிணை பணிமின் நீரே.



தொண்டரடிப் பொடியாழ்வார்  வைபவம்  போன வருட பதிவு ..

ஓம் நமோ நாராயணாய நம!!
தொண்டரடிப் பொடியாழ்வார்  திருவடிகளே சரணம்!!




 அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. ஓம் நமோ நாராயணாய நம!!
    தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்!!

    ReplyDelete