11 January 2019

திருப்பாவை – பாசுரம் 27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா 

"நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்"




கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்;

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,

பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.



நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு



பகைவர்களை தம் அன்பினால் 
 வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா,

 உன்னைப்
பாடிப் பயனைடந்து,

 நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்

அனைவரும் புகழத்தக்க கைவளை; 
தோள்வளை, தோடு, மாட்டல், காலணி என்று 

பலவகை ஆபரணங்கள், ஆடைகள் நாங்கள் அணிவோம். 

அதன் பின்னே முழங்கை வரை வழிந்தோடும்,
 நெய்யுடை பால் அன்னத்தை

 எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்.





ஶ்ரீதேவாதிராஜன் சன்னதி ஶ்ரீ ஆண்டாள் மார்கழி நீராட்டு உத்ஸவம்  -பனிப்போர்வை சாற்றிக் கொண்டு  புறப்பாடு.






படங்களை பதிவிட்ட பக்தர்களுக்கு நன்றிகள் பல

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. பனிப்போர்வை சாற்றி உலா வரும் கோலம் அழகு.

    ReplyDelete
  2. கூடாரைக்கு நேற்று அக்காரைவடிசல் செஞ்சு ஆண்டாளோடு மூட நெய்பெய்து முழங்கைவழிவார இல்லைனாலும் எப்படியோ சாப்டாச்சு...நமக்குத் திங்கறத சொல்லலைனா அந்த வடிசல் ஜீரணம் ஆகாதே!! ஹா ஹா ஹா ஹா

    படம், ஃபோட்டோஸ் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. பொருளும்..

    கீதா

    ReplyDelete