10 January 2019

திருப்பாவை – பாசுரம் 26


மாலே மணிவண்ணா

"மார்கழி நீராட, தேவையான பொருள்களை அளிப்பாயாக!"




மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பால்அன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.




நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு



திருமாலே! மணிவண்ணா! 

மார்கழி நீராட்டத்திற்கு
பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில்

உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்ச சன்னியம்
போன்ற சங்குகளும், 

மிகப் பெரிய பறைகளும்,

பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும்,

கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய
சீலைகளும் வேண்டும். 

ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே, இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.



திருவல்லிக்கேணி ஸ்ரீ கோதை நாச்சியார் - நீராட்டு உற்சவம் திருமஞ்சனம் கண்டருளல்







படங்களை பகிர்ந்த பக்தர்களுக்கு நன்றிகள் பல

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. இந்த பாசுரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மாலே மணிவண்ணா வார்த்தைக்காகவே பிடிக்கும்.

    ReplyDelete
  2. மார்கழி முடியப்போகிறதே... அழகிய படங்கள்.

    ReplyDelete