04 January 2019

திருப்பாவை – பாசுரம் 20

முப்பத்து மூவர்

"பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு!"





முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு வெப்பம்

 கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் 

நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.



நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு


முப்பத்து முன்று கோடி தேவர்களுக்குத்

 துன்பம் வரும் முன்பே சென்று அவர்களின் நடுக்கத்தை 
போக்கும் வீரனே எழுந்திரு!

கருணையுள்ளவனே, 
வல்லமையானவனே, 
பகைவருக்கு பயத்தைக் கொடுக்கும் பெருமானே! 
எழுந்திரு!

தங்கம் போன்ற திருமேனி, சிவந்த உதடு, சிறிய இடையை உடைய நப்பின்னையே!, 

திருமகளே! எழுந்திரு! 

விசிறியும், கண்ணாடியும் உன் கணவனையும் எங்களுக்குக் கொடுத்து
எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக.






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

3 comments:

  1. பாசுரம் படித்தேன்

    ReplyDelete
  2. அனு இன்றைய கேஷவின் படம் இப்பாடலுக்கானதா?

    படத்தைப் பார்த்ததும் இன்று 23? மாரிமலைமுழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து

    பாடலுக்கானது என்று நினைத்தேன்..

    பார்ப்போம் அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான துக்கு படம் எப்படி இருக்கும் என்று....

    அந்தப் பாடல் வரட்டும் அப்ப சொல்லுறேன் நான் என்ன சொல்ல வந்தேன் என்று. எனக்கு மிகவும் பாடல் அது. தினமும் அதை மட்டும் சொல்வதுண்டு...மார்கழி அல்லாத நாளிலும்

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இன்றைய பாடலுக்கானது தான் இந்த படம் கீதாக்கா..

      அங்கண்மா ஞாலத்து க்கு உரிய படம் இன்னும் அழகு கா...வரும் பாருங்கள்...

      அதில் சீரிய சிங்கம் வரும் என்பதால் தானே இந்த சந்தேகம்...

      Delete