06 January 2019

திருப்பாவை – பாசுரம் 22

 அங்கண்மா ஞாலத்து

"கண்ணா! உன் செந்தாமரைக் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?"





அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே

சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?

திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்

அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல், எங்கள்

 மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.



நன்றி திரு.கேசவ் அவர்களுக்கு



அழகிய அகன்ற உலகத்து அரசர்கள், அகங்காரம் குலைந்து 

உன்னுடைய அரியணையின்

 கீழே கூடியிருப்பது போல நாங்களும் நெருங்கி வந்துள்ளோம்.

சலங்கையின் மணியைப் போல, 

பாதி திறந்த தாமரைப்பூ என்னும்படி

 உன் கண்கள் சிறுது சிறுதாக

 எங்கள் மேல் விழிக்கலாகாதோ?

சந்திரனும் சூரியனும் உதித்தாற் போல ,

உன்னுடைய அழகிய இருகண்களாலும் 

எங்களைப் பார்த்தால்
எங்கள் பாவங்கள் தொலைந்து விடும்.





ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்


4 comments:

  1. தரிசனம் நன்று வாழ்க நலம்

    ReplyDelete
  2. அழகிய பாசுரம் - சிறப்பான விளக்கம். படங்களும் அழகு.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  3. இந்தப் பாசுரம் மிகவும் பிடித்த பாசுரம் எனக்கு...

    மகாபாரத நிகழ்வைச் சொல்லி...பாண்டவர் கௌரவர் கிருஷ்ணனின் உதவி நாடிச் செல்லும் போது முதலில் வருபவர்க்கே உதவி எனும் கிருஷ்ணனிடம் துரியோதனன் முதலில் சென்றாலும் தலைக்கருகில் அம்ர்ந்து கொள்ள அப்புறம் வரும் அர்ச்சுனன் பாதம் அருகே அமர்ந்திட கிருஷ்ணன் எழும் போது முதலில் அர்ச்சுனனைப் பார்க்க.. துரியோதனன் படையைக் கேட்க அர்ச்சுனனோ நீ இருந்தால் போதும் என...அதை ஆண்டாள் இங்கு சொல்லி அது போல உன் கண் எங்களை நோக்கியால் போதுமே...என்று இறைவனின் பாதத்தை சரணடைதல் எனும் மிகப் பெரிய தத்துவம் அடங்கிய பாடல்...

    கீதா

    ReplyDelete
  4. மனதிற்கு சுகம் தருகின்ற பாசுரம் கண்டேன். மகிழ்ச்சி.

    ReplyDelete