05 January 2019

ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி

ஸ்ரீ ராம ஜெயம்







ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர்.

 அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர். 

சீதாதேவியால் ‘சிரஞ்சீவி’ பட்டம் பெற்றவர். 

அவரது பிறப்பு மகத்துவம் மிகுந்தது. 

அவர் பிறந்த தினமே ‘அனுமன் ஜெயந்தி’யாக கொண்டாடப்படுகிறது.

வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம்
 மூல நட்சத்திரத்தில் பிறந்தவர், ஆஞ்சநேயர்.




எண்ணைக்காப்பு காணும் அனுமன்



பஞ்சாமிர்த அபிஷேகம் 

தயிர் அபிஷேகத்தில்


பூர்ணகலச அபிஷேகத்தின் போது


வனவாசம் வந்த ஸ்ரீராமனுக்கு, எந்தவித பிரதிபலனையும் கருதாமல் தூய அன்புடனும், பக்தியுடனும் தொண்டு செய்தார்.

 ராமனுக்கு பணிவிடை செய்வதற்காகவே அவர் வாழ்ந்தார். 

சொல்லின் செல்வனான அனுமன் முதன் முதலாக ராமனைச் சந்தித்தபோது, ‘நீங்கள் யார்?’ என்று ராமன் கேட்டார்.

அதற்கு, ‘காற்றின் வேந்தருக்கு அஞ்சனை வயிற்றில் வந்தேன். 
நான் அனுமன் என்று,
 தன் தந்தையின் பெயர், 
தாயாரின் பெயர், 
தன் பெயர் அனைத்தையும் அடக்கமாக கூறினார் அனுமன்.



மஞ்சள்நீர் அபிஷேகம்

மஞ்சள்நீர் அபிஷேகம் காணும் அனுமன் 
பால் அபிஷேகம் 

ஆஞ்சநேயருக்கு சுந்தரன் என்றும் ஒரு பெயர் உண்டு. 

ராமாயணத்தை எழுதிய வால்மீகி மகரிஷி அதை ஏழு காண்டங்களாக பிரித்தார். 

அனுமனுக்கு சிறப்பு சேர்க்கும் விதத்தில் 
ஒரு காண்டத்தை சுந்தர காண்டம் என்று அவரது பெயரால் அழைத்து மகிழ்ந்தார்.






ஆஞ்சநேயப் பெருமானே, அஞ்சனா தேவியின் புதல்வரே நமஸ்காரம். 

மிகுந்த பலத்தையும் எதிரிகளை எளிதாக வெல்லும் 
சக்தியை யும் கொண்டவரே, நமஸ்காரம். 

நினைத்த மாத்திரத்தில் கோரிய எல்லாவற்றையும் 
வழங்கி அருளும் ஆஞ்சநேயா, நமஸ்காரம். 

உம்மை வணங்குபவரிடம் பேரன்பு கொண்டவரே, நமஸ்காரம்.




திருப்பாதங்கள் 


முக நூலில்  ஸ்ரீ  நாமக்கல் ஆஞ்சநேயரின் மிக அழகிய படங்களை பதிவிட்ட பக்தர்களுக்கு நன்றிகள் பல ...


அஞ்சனை மைந்தனே! ஆஞ்ச னேயனே !

நெஞ்சினில் இராமனை நிறுத்திய தேவனே!

அஞ்சுதல் விடுகென உரைத்தே அடியவர் 

நெஞ்சறிந் துதவிடும் நெறியோய்! போற்றி!

ஸ்ரீ அனுமன் திருவடிகளே சரணம் !


ஜெய் ஸ்ரீராம் !!!



அன்புடன்
அனுபிரேம்...

4 comments:

  1. படங்கள்லாம் அருமைப்பா.

    ReplyDelete
  2. நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை 30 ஆண்டுகளுக்கு முன் தரிசித்தது..

    அப்போது இத்தனை ஆடம்பரங்கள் எல்லாம் இல்லை..

    ஸ்வாமியின் ஜயந்தி நாளில் இனிய தரிசனம்..

    வாழ்க நலம்...

    ReplyDelete
  3. அருமையான படங்கள் அனு..
    ஆஹா வடை!!! வடை போச்சே!!

    கீதா

    ReplyDelete
  4. அருமையான படங்கள்.

    அனுமனின் பூரண அருள் அனைவருக்கும் கை கூடுகட்டும்

    ReplyDelete