21 January 2019

தைப்பூசம்


முருகா சரணம்...

கந்தா சரணம்.....


இன்று தைப்பூசம் நன்னாள்....


தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியோடு கூடிவரும் நாளில் ‘தைப்பூச’ திருநாள் கொண்டாடப்படுகிறது
முருகப்பெருமானை வழிபடும் முக்கியமான விழாக்களில் இதுவும்  ஒன்றும்.தேவர்களுக்கும் , அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை.

 எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின.
கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார்.

சிவபெருமானின் தேவியான, அன்னை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். 

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.
தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
சிவபெருமான் சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, பதஞ்சலி, வியாக்ரபாதர் மற்றும் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்கு தரிசனம் அளித்த தினமும் இந்த பூச தினமே என்பதால், அன்றைய தினம் சிவபெருமானுக்கும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.


வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் தைமாதம் பூச நட்சத்திரத்தன்று ஜோதியில் கலந்தார். இதை குறிக்கும் வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் தைமாதத்தில் தைப்பூசத்தன்று அதிகாலை ஜோதிதரிசனம் நடைபெறுகிறது. அன்று மேட்டுக்குப்பத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி வள்ளலாரின் விழாவை கொண்டாடுகின்றனர்.ஓமென்று நினைத்தாலே போதும் 
முருகன் வேல் வந்து அருள் தந்து 
நம் நெஞ்சை ஆளும் 
ஓம் ஓம் ஓம்

ஓமென்று நினைத்தாலே போதும்
முருகன் வேல் வந்து அருள் தந்து 
நம் நெஞ்சை ஆளும் 
ஓம் ஓம் ஓம் 

சிவ பெருமான் விழியின் சுடரானவன் 
சரவணத் திருப்பொய்கை மலரானவன்

சிவ பெருமான் விழியின் சுடரானவன் 
சரவணத் திருப்பொய்கை மலரானவன்

தவ மங்கை இருவருக்கும் உயிரானவன் 
தவ மங்கை இருவருக்கும் உயிரானவன்

தினம் துதி பாடும் உலகினுக்கு ஒளியானவன் 

ஓமென்று நினைத்தாலே போதும் 
முருகன் வேல் வந்து அருள் தந்து 
நம் நெஞ்சை ஆளும் 
ஓம் ஓம் ஓம் 

திருநீறை அணிவோரின் குறை கேட்பவன்
நலம் நாடி வருவோரின் பிணி தீர்ப்பவன்
திருநீறை அணிவோரின் குறை கேட்பவன்
நலம் நாடி வருவோரின் பிணி தீர்ப்பவன்
மறவாமல் தொழுவோரின் நலம் காப்பவன் 
வண்ண மயில் மீது வளம் வந்து அருள் சேர்ப்பவன் 

ஓமென்று நினைத்தாலே போதும் 
முருகன் வேல் வந்து அருள் தந்து 
நம் நெஞ்சை ஆளும் 
ஓம் ஓம் ஓம் 

பால் ஓடும் முகம் காட்டிச் சிரிக்கின்றவன்
பழம் என்னும் அருள் ஊட்டிக் களிக்கின்றவன்

வேல் ஆடும் கரம் நீட்டி அணைக்கின்றவன்
இன்ப நினைவாகி மனமெங்கும் இனிக்கின்றவன்

ஓமென்று நினைத்தாலே போதும் 
முருகன் வேல் வந்து அருள் தந்து 
நம் நெஞ்சை ஆளும் 
ஓம் ஓம் ஓம்


முருகா சரணம் 


அன்புடன்
அனுபிரேம்

5 comments:

 1. தைப்பூச தரிசம் கிடைக்கப் பெற்றேன்...

  ReplyDelete
 2. தைப்பூச தரிசனம் ! கண் குளிர்ந்தது.
  அவ்வளவு அழகான முருகன் படங்கள்.

  ReplyDelete
 3. தைப்பூச நன்னாளில் சிறப்பான தகவல்களை தந்த பகிர்வு. படங்கள் அனைத்தும் அழகு.

  ReplyDelete
 4. அருமையான படங்கள் அதுவும் முதல் படம் மனதைக் கொள்ளை கொள்ளுகிறது. நல்ல தரிசனம்.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 5. Some of the image are not decorated as per old traditions. Please don't post such images.

  ReplyDelete