09 January 2019

திருப்பாவை – பாசுரம் 25

ஒருத்தி மகனாய் 

"கிருஷ்ணா, நாங்கள் விரும்பியதைத் தந்தருளினால் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம்"




ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்

தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை

அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு



தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில்,

யசோதைக்கு மகனாய் ஒளிந்து வளர்ந்துவர,

அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த 

கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!

எங்கள் குறை தீர்க்கும்படி
 உன்னைப் பிரார்த்தித்துவந்தோம். 

விரும்பியதைத் தருவாயானால் ,

லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும்,

 உன் வீரத்தையும் பாடி ,

உன்னைப் பிரிந்து படுகிற துயரம் நீங்கி மகிழ்வோம்.





ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை நாச்சியார் மார்கழிநீராட்டு எண்ணைகாப்பு






படங்களை பகிர்ந்த பக்தர்களுக்கு நன்றிகள் பல..

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.


அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. ஆண்டாள் எண்ணெய் காப்பு கண்டு களித்தேன்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    அழகான கோதை நாச்சியாரின் எண்ணெய் காப்பு படங்களுடன், திருப்பாவை பாசுரம் பாடல் தந்து அதற்கு விளக்கமும் தந்துள்ளீர்கள். ஆண்டாளின் தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்கு முந்தைய பதிவுகளையும் படிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  3. ஆண்டாள் எண்ணெய் காப்பு கண்டு ரசித்தேன்

    ReplyDelete
  4. ஆஹா அருமை....

    படங்கள் அழகு.

    ReplyDelete